அதிமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி! ஒரு தொகுதியை ஒதுக்கினர் ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்!

அதிமுக கூட்டணியில் புதிதாக இணைந்த ஒரு கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.


முதல்வர், துணை முதல்வர் ஏ.சி சண்முகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இடைத்தேர்தலில் புதிய நீதி கட்சி அதிமுக-விற்க்கு ஆதரவு

கட்சி அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு ஏ.சி. சண்முகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது புதிய நீதி கட்சி.

புதிய நீதிக்கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பா.ஜ.கவிற்கு ஐந்து, பா.ம.கவிற்கு ஏழு, புதிய தமிழகத்திற்கு ஒன்று, என்.ஆர்.காங்கிரசுக்கு ஒன்று என 14 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இனி மேலும் 25 தொகுதிகள் மட்டுமே அதிமுக வசம் உள்ளன. எனவே விஜயகாந்த் கூட்டணிக்கு வந்தாலும் அவருக்கு எத்தனை தொகுதிகள் என்பதில் மர்மம் நீடிக்கிறது.