வெயிலோட உஷ்ணத்தை தாங்க வெறும் தண்ணி பத்தாது! கொஞ்சம் புதினா சேத்துக்கோங்க!

நீங்கள் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் என எங்கு சென்றாலும் கூடவே தண்ணீர் பாட்டிலை எடுத்து செல்லுங்கள். அதில் புதினா சேர்த்து கொண்டால் தண்ணீர் வாசனையாகவும் இருக்கும். உடல் சூடும் தணியும்


உடலை ஹைட்ரேட்டடாக வைத்து கொள்ள தண்ணீரே போதுமானது.  அத்துடன் புதினா சேர்பதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.  புதினா சேர்க்கப்பட்ட நீரை குடிக்கும்போது உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்.  உடல் உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.  புதினா உடலில் சிறந்த க்ளென்சராக செயல்படுகிறது.  

கோடை வெப்பத்தை தணிக்கவும் உடலை குளுமையாக வைத்து கொள்ளவும் நாம் அடிக்கடி எலுமிச்சை சாறு, தர்பூசணி, இளநீர், மோர் என குடிப்பது நல்லது.  இந்த வெப்பத்தால் சருமம் மற்றும் கூந்தலும் பாதிப்படைகிறது.அதுபோக, நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை 

தர்பூசணி, முலாம்பழம், பெர்ரீஸ் மற்றும் எலுமிச்சையில் நீர்ச்சத்து அதிகம்.  கூடுதலாக உடல் சூட்டை தணிக்கும் தன்மை கொண்டது.  வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்த இந்த பழங்களை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியளிக்கும்.