வயதில் குறைந்த 9ம் வகுப்பு மாணவனுடன் டேட்டிங் சென்றேன்! பிக்பாஸ் யாஷிகா ஆனந்த் வெளியிட்ட ஷாக் தகவல்!

தம்பி வயதுடைய சிறுவனுடன் டேட்டிங் செய்துள்ளதாக நடிகை யாஷிகா ஓபனாக பேசியுள்ளார். அதில் தவறு இருப்பதாகவும் தெரியவில்லை யாஷிகா.


பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமான நடிகை யாஷிகா ஏற்கனவே “இருட்டு அறையில் முரட்டு குத்து” படத்தில் அறிமுகமானவர். தற்போது அவர் நிறைய படங்களில் நடித்து வருகிறார். ஆரவ்வுடன் ராஜபீமா, மகத்துடன் உத்தமன் ஆகிய படங்களில் பிசியாக உள்ளார் யாஷிகா ஆனந்த். 

சமூகவலைதளத்தில் அவ்வப்போது ஒரு கவர்ச்சி படம் வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார் நடிகை யாஷிகா ஆனந்த். இந் நிலையில் இணையதள ஊடகத்திற்கு பேட்டி அளித்த யாஷிகா தான் 12ம் வகுப்பு படிக்கும்போது 9ம் வகுப்பு பையனுடன் டேட்டிங் சென்றுள்ளதாக தெரிவித்தார். இது மட்டுமின்றி அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை எனவும் கூறியது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. (அதிர்ச்சி ரசிகர்களுக்கு மட்டும்தான்)

மேலும் தன்னை இம்ப்ரஸ் செய்ய நல்ல பர்ஃப்யூம் போட்டிருக்க வேண்டும். உயரமாக இருக்க வேண்டும். தாடி இருக்க வேண்டும். டாட்டூஸ் போட்டிருக்க வேண்டும். தெலுங்கு பேசத் தெரிந்திருக்க வேண்டும் என பல கண்டிஷன் போடுகிறார் யாஷிகா ஆனந்த்.

திருமணம் செய்து கொள்ள தெலுங்கு சினிமா உலகில் ஒருவரை தேர்ந்தெடுந்தால் அது விஜய் தேவரகொண்டாவாகத்தான் இருக்கும் என கூறுகிறார் யாஷிகா ஆனந்த். கடைசியாக தமிழ் சினிமாவில் எனக்கு யாரையும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை என யாஷிகா தெரிவித்தது தமிழ் திரையுலக பிரபலங்களை நிம்மதி அடைய செய்துள்ளது.