கல்யாணத்துக்கு முன்பே காதலனுடன் அந்தரங்க வாழ்க்கை! நடிகை யாஷிகா தற்கொலையின் பரபரப்பு பின்னணி!

புதுமுக நடிகை யாஷிகாவின் தற்கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.


பல திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துக் கொண்டிருந்தவர் யாஷிகா. விமலின் மன்னர் வகையறா படத்திலும் முக்கிய வேடத்தில் இவர் நடித்திருந்தார். மேலும் கதாநாயகி வாய்ப்பு தேடி அலைந்து வந்தார்.

சென்னை வடபழனியில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி சினிமா, டெலிவிசன் சீரியல்களில் யாஷிகா நடித்து வந்தார். அப்போது செல்போன் சர்வீஸ் கடையில் வேலை பார்க்கும் அரவிந்த் எனும் நண்பருடன் யாஷிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் ஈருடல் ஓருயிராக பழக ஆரம்பித்தனர். இதனால் திருமணம் செய்து கொள்ளாமலேயே கொளத்தூரில் வீடு எடுத்து இருவரும் தம்பதிகளாக வாழ ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாட்டால் சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரும் யாஷிகா – அரவிந்த் இடையே கடும் சண்டை மூண்டுள்ளது. இதனை தொடர்ந்து யாஷிகாவை தவிக்கவிட்டு அரவிந்த் சென்றுவிட்டார்.

3 நாட்களாக யாஷிகா தொடர்பு கொள்ள முயன்றும் அரவிந்த் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தனது தாயாருக்கு வாட்ஸ் ஆப்பில் ஒரு தகவல் அனுப்பியுள்ளார் யாஷிகா.

அதில் காதல் என்று கூறியதால் நம்பி வந்த தன்னை ஏமாற்றி அரவிந்த் கொடுமை படுத்தியதாக தெரிவித்துள்ளார். அதாவது தாம்பத்ய வாழ்க்கை வாந்து திருமணம் செய்யாமல் அரவிந்த் ஏமாற்றிவிட்டதாக யாஷிகா கூறியுள்ளார்.

மேலும் தான் இறந்த பிறகு அரவிந்துக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் யாஷிகா தெரிவித்துள்ளார்.  இதனை தொடர்ந்து தனது வீட்டின் மின் விசிறியில் தூக்கு போட்டு யாஷிகா உயிரிழந்துள்ளார்.

தற்கொலை என்று வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர். இதனிடையே காதலியின் இறுதிச்சடங்கில் எவ்வித தயக்கமும் இன்றி அரவிந்தும் வந்து கலந்து கொண்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.