வாய்ப்பு கிடைத்தால் ஆண்கள் எல்லோருமே காமுகர்கள் தான்! நடிகையின் வில்லங்க பேட்டி!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை வினோதினி வைத்தியநாதன் வாய்ப்புக் கிடைக்காத வரை ஒவ்வொரு மனிதனும் தட்டியெழுப்பப்படாத வேட்டை மிருகம்தான் என தெரிவித்துள்ளார்.


எங்கேயும் எப்போதும், ஜிகர்தண்டா, ஓ காதல் கண்மணி, ஆண்டவன் கட்டளை, ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகை வினோதினி வைத்தியநாதன்.  இவர் தனது ஃபேஸ் புக் பக்கத்தில் பொள்ளாச்சி சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி விவகாரத்தை எங்கிருந்து பேசத் தொடங்குவது என்றுகூடத் தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார் இது தொடர்பான பல்வேறு தரப்பினரின்  குமுறலை வெளிப்படுத்திய பதிவுகளைப் படித்ததாக அவர் கூறியுள்ளார்.  குற்றவாளிகளுக்கு எதிரான ஒவ்வொரு குரலும் பதிவும் தனக்குள் நெருப்பை மூட்டியதாக அவர் தெரிவித்துள்ளார். 

பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வன்கொடுமைகளுக்கு நிரந்தரத் தீர்வு அவசியம் என்று கூறியுள்ள அவர் பெண்களுக்கு எதிராக வேர்விட்டுப் பரவியிருக்கும் இந்தப் பிரச்சினையை குழந்தைப் பருவத்தில் இருந்தே அறிந்துள்ளதாகவும், சாலைகள், பேருந்துகள், வீடுகளில் கூட உறவினர்களால் தொல்லை, பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் இந்தப் பிரச்சினை உள்ளதாகக் கூறியுள்ளார்.  

தான் கல்லூரில் படிக்கும் போது சரிகா ஷா ஈவ் டீசிங் கொடுமையால் உயிரிழந்த சம்பவம் நடைபெற்றதாகக் கூறியுள்ள வினோதினிவைத்தியநாதன், தற்போது சாலையோரம் பெண் பூனையை நாய்களும், ஆண்பூனைகளும் துரத்துவதைப் போன்ற நிலை பெண்களுக்கு ஏற்பட்டுவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். 

மனிதர்களின் மிருகத் தனம் அச்சத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்துள்ள அவர் மனிதர்களில் 99 சதவீதம் பேர் மிருக இச்சை கொண்டவர்கள்தான் என்றும் வாய்ப்பு கிடைத்து தட்டியெழுப்பப்படாத வேட்டை மிருகங்கள்தான் என்றும் அவர் கூறியுள்ளார். தூங்கி விழித்தெழும்போது மனிதர்கள் இல்லாத உலகத்தில் விழித்தெழுந்தால்தான் தனால் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் உணர முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்