விபத்தில் சிக்கிய கணவன்! தவிக்கும் நடிகை வினோதினி!

நடிகை வினோதினி தமிழ் சினிமாவில் வண்ண வண்ண பூக்காள் என்ற படம் மூலம் கதாநாயகியாக தனது திரையுலக வாழ்கையை தொடங்கினார்.


பின்னர் ஆத்தா உன் கோயிலிலே, சித்திரை பூக்கள், ஆத்மா போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருந்தார். இவர் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

இவரது கணவர் வெங்கட் ஸ்ரீதர் கட்டிட ஒப்பந்ததாரராக இருக்கிறார். இவர் நேற்று திருவான்மியூரில் இருந்து மெரினாவை நோக்கி இருசக்கர வாகனத்தில் செல்லும்போது பாஷா என்பவரின் வண்டி மீது மோதியுள்ளார்.இந்த விபத்தில் இருவருக்குமே படுகாயம் ஏற்பட்டுள்ளது. நடிகை வினோதினியின் கணவன் ஸ்ரீதருக்கு வயிறு மற்றும் இடுப்பில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.