இன்னும் 2 மாதத்தில் இறந்துடுவேன்! சீமானுக்கு முன்னாள் காதலி விடுத்த கடைசி வேண்டுகோள்!

குடும்ப கஷ்டம் காரணமாக ரஜினிகாந்த்திடம் உதவி கேட்டதை அரசியலாக்க வேண்டாம் என நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


பூந்தோட்டம் என்ற தமிழ்ப் படத்தில் அறிமுகமான நடிகை விஜயலட்சுமி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தெலுங்கு படத்திலும் பின்னர் விஜய் சூர்யா நடித்த பிரெண்ட்ஸ் படத்திலும் நடித்துள்ளார். அதன் பின்னர் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவுக்கு அண்ணியாகவும் மீசைய முறுக்கு படத்திலும் நடித்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.

இவர் கடந்த மாதம் வாட்ஸ் ஆப்பில் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் தான் தமிழ் படங்களில் வாய்ப்பு இல்லாததால் கன்னட திரையுலகிற்கு வந்து 2 படங்கள் நடித்ததாகவும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் கன்னடத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தபோதும் உடல்நலம் காரணமாக பங்கேற்கவில்லை எனவும்  கன்னட திரையுலகில் உதவி செய்வதாக கூறிவிட்டு பல பிரபலங்கள் வேறு மாதிரியான டார்ச்சர் தருவதாகவும் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

மேலும் தனக்கு உதவ கன்னட திரையுலகில் யாரும் முன்வரவில்லை என குற்றம் சாட்டிய விஜயலட்சுமி, நான் ஒரு தமிழ் பெண் என்பதால் கன்னட நடிகர் சங்கம், காவல்துறையினர் தன்னை துன்புறுத்துவதாக கூறினார். எனவே ரஜினிகாந்த் போன்ற பிரபலங்கள் என்னுடைய வறுமையை புரிந்து கொண்டு உதவி செய்யவேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் விஜயலட்சுமி மீண்டும் ஒரு வாட்ஸ்ஆப் வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் நடிகர் ரஜினிகாந்த் தனக்கு உதவி செய்ததை நாம் தமிழர் கட்சியினர் சிலர் அரசியல் ஆக்குவதாகவும், தன்னை மிகவும் கேவலப்படுத்தி பேசிவருவதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

எனக்கு இதயக் கோளாறு உள்ளதால் எந்நேரமும் என்னுடைய உயிர் போகலாம் என தெரிவித்த விஜயலட்சுமி தான் இறப்பதற்கு முன்னர் என்னுடைய குடும்பத்தை கரை சேர்க்க பிரபலங்களிடம் உதவி கேட்பதாகவும் கூறியுள்ளார்.

ரஜினி, கமல் உள்ளிட்டோரிடம் உதவி கேட்பது எனது தனிப்பட்ட உரிமை என்றும் இந்த விஷயத்தை அரசியலாக்கி சீமானுடைய ஆட்கள் மீண்டும் மீண்டும் தன்னை கேவலமாக செய்தி வெளியிட்டால் அனைவர் பெயரையும் குறிப்பிட்டுவிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என மிகுந்த மன உளைச்சலுடன் தெரிவித்துள்ளார் விஜயலட்சுமி.

நான் இறந்த பிறகு தேவையில்லாமல் 10, 20 வருடங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டாம் எனவும் விஜயலட்சுமி வீடியோவில் எச்சரித்து உள்ளார்.