விஷாலை அவங்க அம்மா ஒழுக்கமா வளர்க்கல..! வரலட்சுமிக்கு பகீர் புகார்!

நடிகர் விஷாலை அவரது பெற்றோர் ஒழுக்கமாக வளர்க்க வில்லை என்கிற ரீதியில் வரலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நடிகர் சங்க தேர்தலை முன்னிட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவிக்கு களமிறங்கியுள்ள vishal தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளார். இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவராக சரத்குமார் இருந்தபோது நடிகர் சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்பனை செய்த புகாரில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் விஷால் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் சில ஆவணங்களை ஒப்படைத்து கடந்த வாரம் விசாரணைக்கு மதுரை திரும்பினார் vishal. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விஷால், சரத்குமார் நிலத்தை மோசடி செய்தது உண்மை என்றும் விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் பேட்டி அளித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று வரலட்சுமி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் விஷால் எனது தந்தையான சரத்குமார் குறித்து மிக மோசமாக பேசி இருப்பது அவரது கரத்தை காட்டுவதாக சாடியுள்ளார். நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்படாத தனது தந்தையை vishal வார்த்தைக்கு வார்த்தை குற்றவாளி என்று கூறியிருப்பது கண்டனத்துக்கு உரியது என்றும் வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

அடிப்படைப் பண்பு சிறிதும் இன்றி விஷால் இந்த விவகாரத்தில் நடந்து கொண்டிருப்பதாகவும் அவரை அவரது பெற்றோர் ஒழுக்கமாக வளர்க்க வில்லை என்பதே இதன் மூலம் தெரிவதாகவும் வரலட்சுமி கூறியுள்ளார். நடிகர் சங்கத் தேர்தலில் தான் நிச்சயமாக இந்த முறை விஷாலுக்கு ஓட்டுப் போடப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

விஷாலுடன் மிக நெருக்கமாக பற்றி தெரிந்தால் வரலட்சுமி திடீரென அவருக்கு எதிராகவே அறிக்கை வெளியிட்டுள்ளது திரையுலகம் பரபரப்பாகிவிட்டது.