2 திருமணம்! 3 கணவன்கள்! 3 குழந்தைகள்! ஆனாலும் பெற்ற மகளை வனிதா கடத்தியது ஏன்? பரபரப்பு தகவல்!

2 திருமணம் செய்து மூன்று கணவன்களுடன் வாழ்ந்து 3 குழந்தைகள் பெற்ற பிறகும் தனது மகளையே வனிதா கடத்தியது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.


பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா. விஜயகுமாரின் வாரிசாக முதல் முறையாக சினிமாவில் நடிக்க வந்தவர் இவர் தான். 22 வயதில் கதாநாயகியாக அறிமுமான இவரால் திரையுலகில் சோபிக்க முடியவில்லை. இதனால் ஆகாஸ் என்பவரை கடந்த 2000மாவது ஆண்டு வனிதா திருமணம் செய்து கொண்டார்.

பெற்றோர் பார்த்து வைத்த திருமணத்தின் மூலமாக வனிதாவிற்கு 2 குழந்தைகள் பிறந்தன. முதல் குழந்தை ஆணாகவும் இரண்டாவது குழந்தை பெண்ணாகவும் இருந்தனர். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2005ம் ஆண்டு வனிதா ஆகாசிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

ஆனால் மூத்த மகன் மட்டும் தாத்தா மற்றும் தந்தையின் அரவணைப்பில் இருந்தார். பிறகு 2007ம் ஆண்டு ஆனந்தராஜ் என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார் வனிதா. ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபரான இவரை திருமணம் செய்த பிறகு தான் வனிதாவிற்கு பிரச்சனை உருவானது.

தனது முதல் மகன் மூலமாகத்தான் தந்தையின் சொத்தில் உரிமை கோர முடியும் என்பதால் அவரது அரவணைப்பில் இருக்கும் மகனை கேட்டு மிகப்பெரிய பிரளயத்தையே நடத்தினார் வனிதா. ஆனால் கடையில் அந்த மகன் வனிதாவுடன் வர முடியாது என்று கூறிவிடவே தனது முதல் கணவன் மூலமாக பிறந்த 2வது மகள் மற்றும் 2வது கணவன் மூலமாக பிறந்த பெண் குழந்தையுடன் வசித்து வந்தார்.

இதற்கிடையே வனிதாவிற்கு அவரது தந்தையின் சொத்து கிடைக்காது என்பதை அறிந்த ஆனந்தராஜ் அவரை விவாகரத்து செய்துவிட்டு தனது மகளை அழைத்துக் கொண்டு ஆந்திரா சென்றுவிட்டார். ஆனால் மகளை ஆனந்தராஜிடம் விட்டு வைக்க கூடாது என்று எவ்வளவோ போராட்டம் நடத்தினார் வனிதா.

ஆனால் வனிதாவிடம் வருமானத்திற்கு என்று எந்த வழியும் இல்லாத காரணத்தினால் மகளை தந்தை அரவணையில் வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஐதராபாத்தில் அவரது 3வது மகள் இருந்தார். இந்த நிலையில் மகளை பார்க்க சென்ற போது  தன்னுடன் அழைத்து வந்துவிட்டார் வனிதா.

இதற்கு காரணம் தன்னுடன் 2 மகள்கள் இருப்பதாக கூறி தந்தையிடம் பணம் பறிக்கத்தான் என்கிறார்கள். ஆனால் திடீரென பிக்பாஸ் வாய்ப்பு வந்த காரணத்தினால் என்ன செய்வதென்று தெரியாத வனிதா தனது மகளை தனக்கு மிகவும் நம்பகமான ஒரு வேலைக்காரர் மூலமாக ஒரு இடத்தில் மறைத்து வைத்துவிட்டு பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துவிட்டார்.

இதனை அறிந்து தான் மகளை கேட்டு ஆனந்தராஜ் வந்ததாக சொல்கிறார்கள். ஆனால் மகளை அவர் கேட்பது ஒரு புறம் இருந்தாலும் பிக்பாஸ் வருமானத்தில் பங்கு கேட்கவே சென்னை வந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.