சூட்டிங்கின் போது என் உடலின் அந்த இடத்தில் தொடுகிறார்! நடிகர் மீது நடிகை பகீர் புகார்!

பாலிவுட் நடிகை டினா தத்தா, சக நடிகர் மீது #metoo புகார் கூறியுள்ளார்.


சினிமா பிரபலங்கள் மட்டுமின்றி, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள பெண்கள் பலரும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல்  அக்கிரமங்களை, #metoo என்ற பெயரில் அவ்வப்போது வெளியிடுவது வழக்கமாக உள்ளது. இதன்படி, பாலிவுட் நடிகை டினா தத்தா பாலியல் புகார் ஒன்றை கூறியுள்ளார். 

சினிமாவில் பிரபலமாக இருந்தாலும், டினா தத்தா, 'தாயன்' என்ற வீக்எண்ட் டிவி சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார். இதில், அவரது ஜோடியாக மோஹித் மல்கோத்ரா என்பவர் நடித்து வருகிறார். இந்த சீரியலின் படப்பிடிப்பின்போது, நெருக்கமான காட்சிகள் சிலவற்றில் நடிக்க நேர்ந்ததாக, டினா தத்தா தெரிவிக்கிறார்.

''அந்த நேரத்தில், மோஹித் எனது உடலின் அந்தரங்க உறுப்புகள் மீது கைவைத்து சீண்டினார். முதலில், இதை எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால், அவர் திட்டமிட்டே செய்வதை பின்னர் தெரிந்துகொண்டேன். இதுபற்றி டிவி சீரியல் தயாரிப்புக்குழு உள்ளிட்ட பலரிடமும் புகார் கூறியுள்ளேன்.

அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்,'' என்று டினா தத்தா குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக மீ டூ குறித்த புகார்கள் வெளிவராமல் இருந்தன. தற்போது அடுத்தடுத்து புகார்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. அதிலும் நடிக்கும் போது நடிகையை அந்த இடத்தில் தொட்டதாக கூறப்படும் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.