வாரத்தில் ஐந்து நாட்கள் கட்டாயம் அதை மட்டும் செய்துவிடுவேன்..! 36 வயதிலும் கட்டு குலையாமல் இருக்கும் காரணத்தை கூறிய த்ரிஷா!

தென்னிந்தியவின் கனவு கன்னியாக திகழும் நடிகை த்ரிஷா கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். தற்போதும் அவர் டாப் ஹீரோ படங்களில் நடித்து வருகிறார்.எனக்கு 30 உனக்கு 18 படத்தில் பார்த்தது போல் இன்றும் 18 வயதுடைய தோற்றம் கொண்ட த்ரிஷாவின் அழகின் ரகசியம் இது தான் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.


எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் கச்சிதாமாக நடிக்க கூடிய திறமை மற்றும் அழகு அவரிடம் உள்ளது. அதானல் தான் அவர் இன்னும் ஜொலிக்கும் நட்ச்த்திரமாக திகழ்கிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசும்போது இந்த வயதிலும் ஒல்லியாக இவ்வளவு அழகாக இருப்பதன் ரகசியம் பற்றி கூறியுள்ளார்.

அதில் அவர் "அது என் genesலேயே உள்ளது என்றாலும், சுயகட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். Intermittent fasting, 7 முதல் 8 மணி நேர தூக்கம், வாரம் 5 நாள் உடற்பயிற்சி ஆகியவற்றை தொடர்ந்து செய்வேன். அளவோடு சாப்பிடுவதையும் கடைபிடிப்பேன் என்றும் த்ரிஷா கூறியுள்ளார். இதன் காரணமாக அவர் இளமை தோற்றத்துடன் உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், இன்னும் விண்ணை தாண்டி வருவாயா மற்றும் 96 படத்தில் வரும் ஜானுவை மறக்க முடியுமா என்ன?