படுக்கை அறை காட்சிகளில் நடித்தது வசதியாக இல்லை..! நடிகை கூறும் காரணம்!

மும்பை: நெருக்கமான காட்சிகளில் நடிக்க மிகவும் சிரமப்பட்டேன் என்று, நடிகை திவ்யங்கா திரிபாதி தெரிவித்துள்ளார்.


டிவி சீரியலில் நடிப்பவர்கள், பின்னாளில் சினிமாவில் நடிப்பது இந்தியஅளவில்  வாடிக்கையாக மாறியுள்ளது. இதன்படி திவ்யங்கா திரிபாதி என்பவர் தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.

ஒரு சில படங்களிலேயே அவருக்கு ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், தற்போது ஆல்ட் பாலாஜி உடன் சேர்ந்து கோல்ட் லஸ்ஸி ஆர் சிக்கன் மசாலா என்ற வெப் சீரிஸ் புரொஜெக்டில் திவ்யங்கா, ராஜிவ் கண்டேல்வால் உடன் இணைந்து நடித்துள்ளார்.  

இவர்களின் நடிப்பு, பரவலான பாராட்டை பெற்றுள்ளது. காமெடி தொடங்கி நெருக்கமான காட்சிகள் வரை இரண்டு பேருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இதுபற்றி ஊடகங்களில் பேட்டி அளித்துள்ள திவ்யங்கா, ''கோல்ட் லஸ்ஸி ஆர் சிக்கன் மசாலா வெப் சீரிஸில் வரும் நெருக்கமான காட்சிகளில் நடிக்க மிகவும் சிரமப்பட்டேன். ஒருவழியாக, போராடி, மிகவும் கஷ்டப்பட்டே ராஜிவ் உடன் நெருக்கமாக நடித்தேன். அதற்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவிப்பது, மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்று குறிப்பிட்டுள்ளார்.