என் உடலில் எந்த பாகம் உனக்கு பிடிக்கும்! ரசிகரிடம் பிரபல நடிகை டாப்சி கேட்ட கிக்கான கேள்வி !

நடிகை டாப்சியிடம் உன் உடல் அங்கங்கள் சூப்பராக இருப்பதாக கூறிய நடிகருக்கு அந்த நடிகை அளித்த பதில் வைரல் ஆகி வருகிறது.


   தெலுங்கு, தமிழ் படங்கள் மூலம் அறியப்பட்டவர் டாப்சி. தமிழில் இவர் தனுசுடன் நடித்த ஆடுகளம் படம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாகலா என்கிற பாடல் மூலம் டாப்சி பிரபலம் ஆனார். அஜித்தின் ஆரம்பம் படத்திலும் ஆர்யாவுக்கு ஜோடியாக டாப்சி நடித்துள்ளார்.

   தொடர்ந்து லாரன்சுடன் காஞ்சனா 2, வை ராஜா வை, ஆகிய படங்களில் நடித்தார். அதன் பிறகு டாப்சிக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் இந்தி திரையுலகிற்கு டாப்சி சென்றார். அங்கு தற்போது முன்னணி நடிகையாக டாப்சி வலம் வருகிறார். இவர் நடிப்பில் உருவான பிங்க் படத்தின் ரீமேக்கில் தான் அஜித் தற்போதுநடித்து வருகிறார. இந்த படத்திலும் டாப்சிக்கு முக்கிய வேடம் இருப்பதாக கூறப்படுகிறது.

   இந்தியில் முன்னணி நடியைக இருந்தாலும் டாப்சியின் உடல் கவர்ச்சியாக இல்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவிப்பது வழக்கம். டாப்சி ஒவ்வொரு முறை தனது புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பதிவேற்றும் போதும், அந்த படம் குறித்து மோசமாக விமர்சிப்பது ரசிகர்களின் வேலை. ஆனால் இப்படி ஒவ்வொரு முறை ரசிகர்கள் தன்னை அவமானப்படுத்தும் போது, அதைப்பற்றி கவலைப்படாமல், அவர்களுக்கு பதிலடி கொடுப்பவர் டாப்சி.

   அந்த வகையில் டாப்சி அண்மையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்திற்கு கீழே உன் உடல் அங்கங்களை நான் காதலிக்கிறேன் என்கிற ரீதியில் ஒரு ரசிகர் கமென்ட் செய்திருந்தார். அதாவது உடல் அங்கங்களில் ஒன்றுமே இல்லை என்று கிண்டல் செய்வதற்காக அந்த ரசிகர் இப்படி போட்டிருந்தார். இதற்கு சிறிதும் தயங்காமல் டாப்சி பதில் அளித்துள்ளார்.

   என்னுடைய உடல் அங்கங்கள் நன்றாக இருக்கிறதா? மகிழ்ச்சி, உனக்கு என் உடலில் எந்த பாகம் பிடித்துள்ளது? என்று ரசிகரிடம் பதில் கேள்வி கேட்டதுடன் எனக்கு என் உடலில் மூளையின் ஒரு பாகமான செரிப்ரம் தான் பிடிக்கும் என்று கூறியிருந்தார். அதாவது மூளையில்லாமல் பேசாதா என்பது போல் அந்த ரசிகருக்கு டாப்சி பதில் அளித்திருந்தார். இந்த பதில் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரல்.   

    நடிகை டாப்சியிடம் உன் உடல் அங்கங்கள் சூப்பராக இருப்பதாக கூறிய நடிகருக்கு அந்த நடிகை அளித்த பதில் வைரல் ஆகி வருகிறது.