47 வயதிலும் தனிமையில் தவிக்கிறேன்! காரணம் அந்த நடிகர் தான்! தபு வெளியிட்ட ஷாக்கிங் தகவல்!

''நான் திருமணம் செய்யாமல் தனிமையில் வாடுவதற்கு அஜய் தேவ்கன்தான் காரணம்,'' என்று பாலிவுட் நடிகை தபு திடுக்கிடும் புகாரை கூறியுள்ளார்.


ஆம். பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், சக நடிகை கஜோலை திருமணம் செய்துள்ளார். அதேசமயம், படங்களிலும் நடித்து வரும் அவர், சமீபத்தில் தபு உடன் ஜோடி சேர்ந்து, கோல்மால் எகெய்ன், திரிஷ்யம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

 

இந்த படங்கள் சூப்பர் ஹிட் என்ற நிலையில், தற்போது டி டி பியார் டி என்ற புதிய படத்தில் தபுவுடன் இணைந்து, அஜய் தேவ்கன் நடித்து வருகிறார்இத்தகைய சூழலில், திருமண வாழ்க்கை பற்றி, நடிகை தபு முன்னணி பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

 

அதில் அவர் கூறுகையில், ''எனக்கு மும்பை மட்டுமின்றி, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் நெருங்கிய நண்பர்கள் உள்ளனர். அவர்களில், ஃபரா கான், சமீர் ஆர்யா, அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கியமானவர்கள்.

 

இவர்கள் 3 பேருக்கும் தற்போது திருமணமாகிவிட்டது. இதில், அஜய் தேவ்கனை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால், அது காதல்தானா என்று எனக்குச் சரியாக தெரியவில்லை. அதேசமயம், அஜய் தேவ்கனும், எனது கஷின் சமீர் ஆர்யாவும் நெருங்கிய நண்பர்கள்.

 

இவர்கள் எனக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக பழக்கம்.  இளமைக் காலத்தில் என்னை, இவர்கள் 2 பேரும் ரகசியமாக வேவு பார்ப்பார்கள். என்னிடம் யாரேனும் பேசினாலோ, பழகினாலோ உடனே இவர்கள் ஓடிவந்து, அந்த நபர்களை அடித்து விரட்டிவிடுவார்கள்.

 

இப்படி செய்தே, எனக்கு காதல் அல்லது திருமணம் எதுவும் நடக்க விடாமல் இவர்கள் 2 பேரும் தடுத்துவிட்டார்கள். அதிலும், அஜய் தேவ்கன்தான் நான் தனிமையில் வாடுவதற்கு முதன்மை காரணம்,'' என்று தபு திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ளார்

 

இந்த தகவல் கேட்க சுவாரசியமாக இருந்தாலும், முதிர்கன்னி என்ற முறையில் தபுவின் சூழ்நிலை வருந்தும்படியாக உள்ளதே உண்மை.