அந்த நடிகருக்காக பல நடிகைகள் க்யூவில் நிற்கின்றனர்! டாப்ஸி வெளியிட்ட சினிமா சீக்ரெட்!

நடிகர் கார்த்திக் ஆர்யனுடன் டேட்டிங் இல்லை என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.


தமிழில் ஆடுகளம் திரைப்படத்தில் மூலம் பிரபலமான நடிகை டாப்ஸி , தற்போது பாலிவுட்டில் படு பிஸியாக உள்ளார். அவரது முந்தைய படமான பட்லா வசூலைக் குவித்தது. அவர் தற்போது நடித்துள்ள கேம் ஓவர் என்ற திரைப்படம் ஜூன் 14-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

த்ரில்லர் ரக படமான கேம் ஓவர் நிச்சயமாக வெற்றி பெறும் என்று பாலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் செய்தி இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்த டாப்ஸியிடம் ருசிகர கேள்வி ஒன்று கேட்கப்பட்டது.  கார்த்திக் ஆர்யனுடன் டேட்டிங் செய்ய உங்களுக்கு ஆசை இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு சற்றும் யோசிக்காமல் இல்லை என்றால் டாப்சி. ஏன் தற்போதைக்கு கார்த்தி தானே இந்தி திரையுலகின் ஹாட் ஹீரோ என்று கேட்ட போது, ஏற்கனவே அந்த ஹீரோவுக்காக பல ஹீரோயின்கள் வரிசையில் நிற்கும் போது நானும் போய் நிற்க முடியுமா? என்று கேட்டுள்ளார் டாப்ஸி.

இந்தக் கேள்விக்கு மிகவும் சாமர்த்தியமாக பதில் அளித்த டாப்ஸி கேம் ஓவர் என்று மட்டும் குறிப்பிட்டார். அதற்கான காரணத்தை பின்னர் அவர் தெரிவிக்கையில் அது ருசிகர பதிலாக மாறியது. கார்த்திக் ஆர்யனை சுற்றி ஒரு பெண்கள் கூட்டம் இருப்பதாகவும், அவருடன் டேட்டிங் செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்க தாம் விரும்பவில்லை என்றும் டாப்ஸி தெரிவித்தார்.