நடிகை உடலின் அந்த பாகத்தை குறிவைத்து போட்டோ! பிறகு இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்!

மும்பை: நடிகை டாப்ஸி தன்னை அனுமதியின்றி போட்டோ எடுத்த நபரை சமீபத்தில் திட்டியதாக, தெரிவித்துள்ளார்.


கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பரபரப்பான சினிமா நடிகையாக டாப்ஸி வலம் வருகிறார். 31 வயதாகும் டாப்ஸி பஞ்சாப்பை சேர்ந்தவர் ஆவார். சமீபத்தில், டாப்ஸி தனது சகோதரியுடன் ரெஸ்டாரண்டிற்கு சாப்பிட சென்றுள்ளார். 

அங்கே சாப்பிட்டு முடித்துவிட்டு வெளியே காருக்காக காத்திருந்துள்ளனர். அப்போது, அவ்வழியே சாலையில் வந்த இளைஞர் ஒருவர் திடீரென செல்ஃபோனை வெளியே எடுத்து, டாப்ஸியையும், அவரது சகோதரியையும் படம் பிடித்துள்ளார். ஆனால் அவர் நடிகையின் அந்த பாகத்தை ஃபோகஸ் செய்துள்ளார்.

இதனை பார்த்ததும் கோபமடைந்த டாப்ஸி, உடனே அந்த நபரை சுற்றி வளைத்து, ஒழுங்கு மரியாதையா ஃபோனை உள்ளே வச்சிட்டு ஓடிப் போயிடு, எனக் கண்டித்துள்ளார். இந்த சம்பவம் பற்றி தற்போது மிட் டே ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் டாப்ஸி குறிப்பிட்டுள்ளார்.

''நான் ஒன்றும் பொதுச் சொத்து கிடையாது, நானும் சாதாரண ஆள்தான், என் அனுமதியின்றி போட்டோ எடுப்பது தவறு என்பதை உணர்த்தவே அப்படி நடந்துகொள்ள நேரிட்டது.இதற்கு காரணம், அப்போது நான் மன்மார்லியான் என்ற படத்தில் நடித்த ருமி கதாபாத்திரம்தான். அந்த கதாபாத்திரத்தின் குணாதிசயம் எனக்குள் படிப்படியாக புகுந்துவிட்டதாக நினைக்கிறேன்,'' என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.