அவளைப் போல் விரல்களை சுய இன்பத்திற்கு பயன்படுத்தாதீர்கள்! விபரீத விளம்பரத்தால் நடிகை அப்ஷெட்!

பாலிவுட் நடிகை ஸ்வாரா பாஸ்கர் சுய இன்பம் செய்யும் காட்சியை மையமாக வைத்து, சமூக ஊடகங்களில் பலரும் கலாய்த்து வருகின்றனர்.


இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி, பலரும் ஓட்டுப் போடுவது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்தான், ஸ்வாரா பாஸ்கரை மேற்கோள் காட்டி 2 பேர் விளம்பர பதாகைகளை பிடித்தபடி நிற்கும் புகைப்படம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் பதாகையை கையில் பிடித்தபடி நிற்கின்றனர்.

அந்த பதாகையில், ஸ்வாரா பாஸ்கர் போல விரலை அசிங்கமாகப் பயன்படுத்தாதீர்கள். ஓட்டுப் போட சரியான முறையில் உங்களின் விரலை பயன்படுத்துங்க என எழுதப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான வீர் டீ வெட்டிங் என்ற படத்தில் ஸ்வாரா பாஸ்கர், சுய இன்பம் செய்யும் காட்சி இடம்பெற்றிருந்தது. இதில் நடித்தமைக்காகவும், இந்த காட்சியை படத்தில் வைத்தமைக்காகவும் பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

இந்நிலையில்தான், ஓட்டு போடுவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசாரத்திற்கு சிலர், ஸ்வாரா பாஸ்கர் போல விரலை அசிங்கம் செய்யாமல், சரியான முறையில் அந்த விரலை வைத்து மை தடவி, ஓட்டுப் போடுங்கள் எனக் கூறியுள்ளனர். இந்த புகைப்படத்தை பலரும் வைரலாகப் பகிர்ந்து வரும் நிலையில், ஸ்வாரா பாஸ்கரும் பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''என்னை பிரபலம் ஆக்கியதற்கு நன்றிகள் நண்பர்களே. என்னை பிரபலமாக்குவதற்காக, நீங்கள் வியர்வை சிந்தி உழைப்பதை பார்க்கும்போது எனக்கு மிக வேதனையாக உள்ளது. உங்களது கற்பனைத்திறன் பாராட்டும்படி உள்ளது,'' எனக் கூறியுள்ளார்.