நடிகை சுஷ்மிதாசென் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 1994ஆம் ஆண்டு முதல் படங்களில் நடித்து வருகிறார்.
27 வயது பையனுடன் ஓடிப்போகப் போறேன்! 43 வயது நடிகை வெளியிட்ட ஷாக் தகவல்!

மேலும் 1994ம் ஆண்டு மிஸ் இந்தியா மற்றும் மிஸ் யூனிவர்ஸ் பட்டங்களை வென்றவர் ஆவார். அதன் பின்னர் தமிழில் ரட்சகன் என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றவர் இவர். மேலும் முதல்வன் என்ற தமிழ் படத்திலும் நடித்து அசத்தியிருப்பார். இவருக்கு தற்போது வரை திருமணம் ஆகவில்லை.
43 வயதான இவர் ரோமன் ஷாவ்ல் என்னும் ஒரு மாடலை காதலித்து வருகிறார். அவருக்கு 27 வயது மட்டுமே ஆகிறது என்று குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒரு இன்ஸ்டகிராம் புகைப்படத்தை பதிவேற்றி வித்தியாசமாக ஒரு கருத்தினை பதிவு செய்துள்ளார் சுஷ்மிதா சென். இருவரும் ஓடிப் போவது போல் அந்த புகை படம் உள்ளது.
இதற்கு நாம் இருவரும் எங்காவது ஓடிப் போய் விடுவோம் என்று காதல் ததும்ப ததும்ப அந்த இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில் கேப்ஷன் போட்டுள்ளார் சுஷ்மிதா சென். இதனை பார்த்த ரசிகர்கள் 43 வயதில் உங்களுக்கு 27 வயது காதலர் தேவைதானா என்பதுபோல் கமெண்ட் செய்து வருகின்றனர்.