5 இயக்குநர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளதாக தமிழ்த் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகை ஒருவர் பேசியது சினிமா உலகில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
5 டைரக்டர்கள்! அதில் ஒருவர் தமிழர்! படுக்கைக்கு அழைத்தவர்களை பகிரங்கப்படுத்திய நடிகை!

வசந்த் இயக்கத்தில் ‘மூன்று பேர் மூன்று காதல்’படத்தின் கதாநாயகி சுர்வின் சாவ்லா. அர்ஜுனுடன் ‘ஜெய்ஹிந்த்-2’ மற்றும் ‘புதிய திருப்பங்கள்’தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
சுர்வின் சாவ்லா அளித்த பேட்டியில் சினிமா வாழ்க்கையில் 5 முறை பாலியல் தொல்லைகளை சந்தித்துள்ளதாக தெரிவித்தள்ளார். தென்னிந்தியாவில் ஒரு இயக்குநர் என் உடம்பில் உள்ள பாகத்ங்களை பற்றி தெரிந்து கொள்ள விரும்பியதால் அவரது போன் அழைப்புகளை எடுப்பதே இல்லை என குறிப்பிட்டார்.
தேசிய விருது வாங்கிய இயக்குநர் ஒருவர் தன்னிடம் ஆபாசமான வசனங்களை பேச வைத்து ஏதோதோ செய்ததாகவும் சுர்வின் சாவ்லா தெரிவித்தார். அவருக்கு தமிழ் தவிர ஆங்கிலமோ இந்தியோ தெரியாது என்பதால் வேறு ஒருவரை வைத்து அணுகியதாகவும் கூறினார். மேலும் படப்பிடிப்பு தொடங்க கொஞ்ச நாள் ஆகும் என்பதால் அதுவரை அட்ஜஸ்ட் செய்து கொள்ளுமாறு கேட்டார் எனவும் என்ன அட்ஜஸ்ட் என்று கேட்டதற்கு மழுப்பலான பதில் சொன்னதாகவும் கூறுகிறார் சுர்வின் சாவ்லா.
நான் அவரிடம் தவறான கதவை தட்டுகிறீர்கள். எனக்கு திறமை இருந்தால் வாய்ப்பு அளியுங்கள் இல்லாவிட்டால் வேண்டாம் என்று கூறிவிட்டு வந்து விட்டதாகவும் தெரிவிக்கிறார். சினிமாவில் வரும் காட்சிகளை எப்படி நம்பும் மாதிரியாகவும், நம்பாத மாதிரியாகவும் இருக்கிறதோ அதுபோல்தான் அவர்கள் படம் ஓடுவதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார்கள் என நெட்டிசன்கள் கேலி செய்கிறார்கள்.