பிரதமர் மோடியை ஓவர்டேக் செய்த நடிகை சன்னி லியோன்! எப்படி? எப்படி?

இன்றைய உலகில் ஒருவர் எந்த அளவுக்கு மீடியாவில் பேசு பொருளாக இருக்கிறார்,மக்கள் யாரைப் பற்றித் தெரிந்துகொள்ள மிகவும் ஆவலாக இருக்கிறார்கள் என்பதை கணக்கிடும் அளவுகோலாக திகழ்கிறது கூகுள் தேடு இயந்திரம்.


அதுபற்றி கூகுள் நிறுவனம் அவ்வப்போது புள்ளி விபரங்களை வெளியிடும்.அப்படி இந்த ஆண்டு,இந்திய மக்களால் அதிகம் தேடப்பட்டவர் என்கிற பெருமையை பெற்றிருப்பவர் சன்னி லியோன்.இந்தி சூப்பர் ஸ்டார்கள்,சல்மான் கான்,சாருக்கான்,தினந்தோறும் அதிரடி காட்டிவரும் பிரதமர் மோடி ஆகியோரை ஓவர்டேக் செய்து இப்படி முதலிடத்தை பிடித்து இருக்கிறார் சன்னி லியோன்.

பெரும்பாலானோர் சன்னி லியோனின் வீடியோக்களை விரும்பிப் பார்த்து இருப்பதாக கூகுள் தரும் புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. குறிப்பாக இந்தியாவின் வடகிழக்கு மாநில மக்கள்தான் சன்னி லியோன் பற்றி அறிந்துகொள்ள மிகவும் ஆர்வம் காட்டி இருக்கிறார்கள். அதிலும் மணிப்பூர், அசாம் மாநில மக்கள் அதிகஅளவிலி சன்னி லியோன் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் காட்டி இருக்கிறார்கள்.

சன்னி லியோன் வாழ்க்கையை பற்றிய தொடர்களை இவர்கள் கணக்கு வழக்கில்லாமல் தேடித் தேடிப் பார்த்திருக்கிறார்கள்.இதுபற்றி பேசும்போது ' இந்தப் பெருமையை என் ரசிகர்கள் தான் எனக்குக் கொடுத்து இருக்கிறார்கள். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர்களுக்கு எனது நன்றி 'என்று சொல்லி இருக்கிறார்..

இப்படி சூப்பர் ஸ்டார்களையும்,மக்களை எப்போதும் பரபரப்பிலேயே வைத்திருக்கும் பிரதமர் மோடியையும் தாண்டி சன்னி லியோன் முதலிடம் பெறுவது இது முதல் முறை அல்ல,கடந்த ஆண்டும் சன்னி லியோனுக்கே முதலிடம் என்பது ஒரு உபரித் தகவல்!.