காதலில் விழுந்தேன் சுனைனாவுக்கு ரகசிய திருமணம்..? அவரே வெளியிட்ட தகவல்..! என்ன தெரியுமா?

ரகசிய திருமணம் செய்யும் திட்டம் ஏதுமில்லை என நடிகை சுனைனா ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.


2008ம் ஆண்டு காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கால்பதித்தவர் நடிகை சுனைனா. இதில் இவருக்கு ஜோடியாக தேவயானியின் தம்பியும் நடிகருமான நகுல் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் நகுலுக்கு ஜோடியாக 'மாசிலாமணி', விஷ்ணு படத்தில் விஷாலுக்கு ஜோடியாக 'நீர்ப்பறவை' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமானார் சுனைனா. 

இந்நிலையில் சுனைனாவுக்கு கதாநாயகிக்கான வாய்ப்புகள் குறைந்தது. இதையடுத்து சிறிய வாய்ப்புகள் வந்தாலும் விடக்கூடாது என்று அதிலும் நடிக்கத் தொடங்கினார். விஜய் நடிப்பில் 2016ல் வெளியான, 'தெறி', 'எனை நோக்கி பாயும் தோட்டா' சமுத்திரக்கனிக்கு ஜோடியாக 'சில்லு கருப்பட்டி' படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை மீண்டும் பெற்றார். 

இதற்கிடையே சுனைனாவுக்கு ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டதாக அரசல் புரசலாக புரளி எழுந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார். அதில் முறையான அறிவிப்பு எதுவும் இன்றி திருமணம் செய்து கொள்ள மாட்டேன் அனைவருக்கும் தெரிவிப்பேன்.

எனவே வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறினார். சுனைனா இப்படி பதில் அளித்தவுடன் அவரது ரசிகர்கள் தற்போது நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளனர்.