சாகும் போது அந்த நடிகை 2 மாத கர்ப்பம்! பிரபல இயக்குனர் வெளியிட்ட டாப் சீக்ரெட்!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் கலக்கிய நடிகை சவுந்தர்யாக மரணிக்கும் போது 2 மாதம் கர்ப்பமாக இருந்ததாக கூறி அதிர வைத்துள்ளார் இயக்குனர் ஆர்.வி உதயகுமார்.


நடிகர் ரஜினியுடன் அருணாச்சலம், படையப்பா படங்களில் நடித்தவர் சவுந்தர்யா. வேதவள்ளி என்று கூறினால் இவர் தான் நினைவுக்கு வருவார். அந்த அளவிற்கு அருணாச்சலம் படத்தில் நடித்திருப்பார்.

தமிழின் முன்னணி நாயகர்கள் அனைவருடனும் இவர் நடித்திருந்தார். இவரை திரையுலகில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் ஆர்.வி உதயகுமார். தன்னுடைய பொன்னுமணி திரைப்படத்தின் மூலமாகத்தான் சவுந்தர்யாவை இவர் அறிமுகம் செய்திருந்தார்.

கடந்த 2003ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சவுந்தர்யா. 2004ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற போது விமான விபத்தில் பலியானார். இது குறித்து அண்மையில் சென்னையில் நடைபெற்ற படவிழா ஒன்றில் ஆர்.வி உதயகுமார் பேசினார்.

அப்போது 2004ம் ஆண்டு ஏப்ரல் 16ந் தேதி சவுந்தர்யா தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக கூறினார். அப்போது தான் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக சவுந்தர்யாக கூறியதாகவும் உதயகுமார் தெரிவித்தார். மறுநாள் காலை செய்தியை பார்த்த போது விமான விபத்தில் சவுந்தர்யா உயிரிழந்தார் என்கிற தகவல் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.

இதனை கேட்டு தான் நொறுங்கிப் போய்விட்டதாகவும் உதயகுமார் கூறியுள்ளார். இதுநாள் வரை இதனை தான் யாரிடமும் கூறியதில்லை என்றும் தற்போது தான் கூறுவதாகவும் உதயகுமார் கூறினார்.