37 வயதில் தனிமை! ஏக்கத்தில் தனுஷின் முன்னாள் அண்ணி எடுத்த முடிவு!

நடிகை சோனியா அகர்வால் பஞ்சாபைச் சேர்ந்தவர். இவருக்கு தற்போது 37 வயதாகிறது.


காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஒரு கல்லூரின் காதல் கதை என பல ஹிட் படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.  ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருப்பவர்  கடந்த 2006ஆம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன் உடன் இவருக்கு திருமணம் ஏற்பட்டது. பின்னர் நான்கு வருடங்கள் இருவரும் இணைந்து வாழ்ந்தனர். திருமணம் ஆன பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்து. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2010ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர் .

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க மிக மும்முரமாக தயாராகியுள்ளார் சோனியா அகர்வால்.  சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான தடம் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது புதுமுக இயக்குனரின் இயக்கத்தில் தனிமை என்ற ஒரு படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படத்தில் நடித்துள்ளார்.

 சோனியா இந்த படத்தில் கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏப்ரல் 26ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர உள்ளது. இந்த ‘தனிமை’ படத்தில் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு அகதியாக வரும் ஒரு தாய் மீண்டும் இலங்கைக்கே சென்று தொலைந்துபோன தனது குழந்தையை தேடும் ஒரு கதையில் நடித்துள்ளார் சோனியா.

அதாவது 37 வயதிலும் தான் தனிமையில் இருப்பதை இப்படி சிம்பாலிக்காக சொல்லியுள்ளார் சோனியா அகர்வால். அவர் யாருக்கு இதை சொல்கிறார் என்பது தான் தெரியவில்லை.