நான் அதிக நாள் வாழமாட்டேன்! காதலர் தின நடிகை திடுக் தகவல்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தான், 30 சதவீதம் மட்டுமே கிடைக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறிய தகவலை வெளியிட்டுள்ளார்.


காதலர் தினம் படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் சோனாலி பிந்த்ரே. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு புற்றுநோய் இருப்பதாக கூறி ரசிகர்களை அதிர வைத்தார். உடலில் ஒரு இடத்தில் தோன்றி பல்வேறு இடங்களுக்கு பரவும் புற்றுநோயால் இவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை தொடர்பாக அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் சிகிச்சை தொடர்பாக செய்தியாளர் ஒருவரிடம் பல தகவல்களை சோனாலி பிந்த்ரே பகிர்ந்துகொண்டுள்ளார்.

தன்னை தனது கணவர் கோல்டை, அவசர அவசரமாக நியூயார்க் அழைத்துச் சென்றதாக சோனாலி கூறியுள்ளார். இரவு முழுவதும் விமானத்தில் கணவருடன் சண்டையிட்டுக் கொண்டே இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே சிறந்த மருத்துவர்கள் இருக்கும்போது எதற்காக நியூயார்க் செல்ல வேண்டும் என்று கணவரிடம் சண்டை போட்டதாக சோனாலி குறிப்பிட்டார்.

மூன்று நாட்களிலேயே குடும்பம் குழந்தைகளை விட்டுவிட்டு நியூயார்க் புறப்பட்ட நிலையில், அங்கு சென்று பரிசோதனைகளையும் சிகிச்சைகளை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அப்போது மருத்துவ அறிக்கைகளை பார்த்த மருத்துவர்கள், தனக்கு பிழைக்கும் வாய்ப்பு 30 சதவீதமாக குறைந்து இருப்பதாக கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாக சோனாலி தெரிவித்தார். புற்றுநோயானது நான்காம் கட்டத்தை எட்டிவிட்டது அங்கு சென்ற பின்னரே தெரிய வந்ததாகவும் கூறிய சோனாலி, கணவரிடம் சண்டை போட்டதை நினைத்து வருத்தப்பட்டதாக கூறினார். மேலும் அந்த தருணத்தில் கடவுளுக்கு நன்றி கூறியதாகவும் சோனாலி தெரிவித்தார்.