அடி வயிறு முழுவதும் புற்று நோய் கட்டிகள் பரவியது! தன்னம்பிக்கையுடன் மீண்டு வந்துள்ள காதலர் தின நடிகை!

வயிறு வரை புற்றுநோய் பரவி இருந்ததாக சோனாலி பிந்த்ரே கூறியுள்ளார்.


பாலிவுட் நடிகையான சோனாலி பிந்த்ரே வுக்கு புற்றுநோய் இருப்பது கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. உள்நாட்டில் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்ற அவர் பின்னர் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் அண்மையில் அவர் நாடு திரும்பினார்.

மீண்டும் அவர் தனது பணியை தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் பத்திரிகை ஒன்றுக்கு அட்டைப் படத்திற்காக அவர் போஸ் கொடுத்துள்ளார். அந்தப் பத்திரிக்கை இடம் பேசிய சோனாலி பிந்த்ரே, அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது ஆரம்பத்தில் தனது வயிறு முழுவதும் புற்று கட்டிகள் பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

தான் உயிர் பிழைப்பதற்கு 30 சதவீதம் மட்டுமே சாத்தியக்கூறுகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.ஆனால் தான் இறந்து விடுவேன் என்று தனக்கு தோன்றவில்லை எனக் கூறியுள்ள சோனாலி பிந்த்ரே, இனி வாழ்க்கை கடினமாக இருக்கப் போகிறது என்று மட்டுமே எண்ணியதாகவும் தெரிவித்துள்ளார்.

மரணம் என்ற எண்ணமே தனது மனதில் உதிக்கவில்லை எனவும் நம்பிக்கையுடன் சோனாலி பிந்த்ரே குறிப்பிட்டுள்ளார். காதலர் தினம் படத்தில் என்ன விலை அழகே என்று வரும் பாடலில் அதற்கு தகுந்தாற்போல் அழகாக வரும் சோனாலிக்கா இப்படி ஒரு நிலைமை என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.