ஆர்டர் செய்ததோ ஹெட்போன்! அமேசான் அனுப்பி வைத்ததோ குப்பை! கதறும் ரஜினி பட நடிகை!

அமேசானில் போஸ் ஹெட்போன் ஆர்டர் செய்த நிலையில் அட்டைப் பெட்டிக்குள் குப்பையை வைத்து பிரபல நடிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


அமேசானில் போஸ் ஹெட்போன் ஆர்டர் செய்த நிலையில் அட்டைப் பெட்டிக்குள் குப்பையை வைத்து பிரபல நடிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது அமேசான், பிளிப்கார்ட் மிகவும் பிரபலமானஆன்லைன் வர்த்தக நிறுவனங்களாக உள்ளன. ஒரு காலத்தில் எதை வாங்குவதற்கும் அருகாமையில்உள்ள கடைக்கு மக்கள் சென்று வந்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அமேசான்,பிளிப்கார்ட் வருகைக்கு பிறகு தங்களுக்கு வேண்டியதை ஆன்லைனில் வாங்கும் நிலைக்குமக்கள் வந்துவிட்டனர்.

  சாப்பிடுவதற்குதேவையான உணவை கூட ஸ்விக்கி, உபேர் ஈட்ஸ்சில் ஆர்டர் செய்வது வீட்டுக்கே வரவழைத்துசாப்பிடும் நிலைக்கு மக்கள் சுருங்கிவிட்டனர். இதே போல் தான் வீட்டிற்கு தேவையானகால்மிதியில் இருந்து செருப்புகள் வரை ஏன் தொலைக்காட்சிகள், பிரிட்ஜ்கள் போன்றவற்றைகூட அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் மக்கள் ஆர்டர் செய்து வருகின்றனர்.


   இப்படியாக ஆர்டர்செய்யும் பொருட்கள் ஒரு சில நேரங்களில் வேறாக வருவது உண்டு. உதாரணத்திற்குஆன்லைனில் நாம் பார்க்கும் ஆடைகளுக்கும் நமக்கு வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும்உடைகளுக்கும் அதிக வித்தியாசம் இருக்கும். விளக்கம் கேட்டால், புகைப்படத்தில்இருப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கும் என்று செல்லர்கள்நமக்கு புதிய விளக்கம் தருவார்கள்.

   இது ஒரு விஷயம்என்றால் நாம் செல்போன் ஆர்டர் செய்தால் செங்கல்லை அனுப்பி வைப்பது. ஹெட் போன்ஆர்டர் செய்தால் வெறும் அட்டை பெட்டியை அனுப்பி வைப்பது போன்ற பிரச்சனைகளும்அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் இருந்து வருகிறது. அண்மையில் கூட பிரபல தமிழ்நடிகர் நகுலுக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்தது. அவர் ஆன்லைனில் ஆப்பிள் நிறுவனஐபோன் ஆர்டர் செய்திருந்தார்.

   ஆனால் பிளிப்கார்ட்நிறுவனமே நகுலுக்கு தரமட்ட இரண்டாம் தர ஐபோனை அனுப்பியிருந்தது. இந்த பிரச்சனையைநகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த பிறகு பிளிப்கார்ட் நிறுவனம் நகுலுக்குஐ போனுக்கான தொகையை திரும்ப கொடுத்தது. நகுலுக்கு பிரச்சனை இப்படி என்றால்,ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்த சோனாக்சி சின்ஹாவுக்கு புதுமாதிரியானஅனுபவம் வந்துள்ளது.

   அமேசான்நிறுவனத்தின் இணையதளம் மூலமாக சோனாக்சி போஸ் நிறுவனத்தின் ஹெட் போன் ஒன்றை ஆர்டர்செய்துள்ளார். ஹெட் போனுக்கான 18 ஆயிரம் ரூபாயையும் ஆர்டர் செய்யும் போதே சோனாக்சிசெலுத்தியுள்ளார். இந்த நிலையில் மும்பையில் உள்ள சோனாக்சி வீட்டுக்கு அமேசான்நிறுவனம் ஹெட்போன் பார்சல் அனுப்பியுள்ளது.

   அந்த பார்சலைதிறந்து பார்த்ததும் சோனாக்சி அதிர்ந்து போய்விட்டார். ஏனென்றால் போஸ் என்றுகுறிப்பிடப்பட்டிருந்த பாக்சில் இருந்ததே குப்பை போன்ற பழைய இரும்பு துண்டு ஒன்று.போஸ் ஹெட் போனுக்கு அமேசான் நிறுவனம் இதனை அனுப்பியுள்ளதே என்று உடனடியாக தனதுட்விட்டர் பக்கத்தில் தனது கதறலை சோனாக்சி வெளிப்படுத்தியுள்ளது.

   அமேசான்நிறுவனத்தில் 18 ஆயிரம் ரூபாய் கொடுத்து போஸ் ஹெட் போன் ஆர்டர் செய்த எனக்குகிடைத்ததே ஒரு பழைய இரும்புத்துண்டு என்று வேதனையுடன் சோனாக்சி தெரிவித்துள்ளார்.உடனடியாக அமேசான் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்து ரசிகர்கள் ட்விட்டரில்தகவல்களை பதிவிட ஆரம்பித்துள்ளனர்.