மார்பகத்தில் ஆசிட் வீசினான்..! குழந்தைக்கு பாலூட்ட முடியவில்லை! கதறிய பிரபல நடிகையின் தங்கை!

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகையின் சகோதரி, தனது சொந்த குழந்தைக்கு பாலூட்ட முடியாமல் தவிப்பதாக மனம் உருக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தின் சகோதரியான ரங்கோலி, தனது கல்லூரி காலத்தில் தன்னை ஒருவர் காதலித்ததாகவும் அதனை ஏற்க மறுத்ததால் தன் மீது ஆசிட் ஊற்றியதாகவும் ட்விட்டர் பதிவிட்டார்.  

மேலும் இந்த விபத்தினால் தனது காது, கழுத்து, மார்பகம் போன்ற பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட அவர், இதனால் மார்பக பகுதிகளுக்கு வேறு பகுதியில் இருந்து சதைகள் எடுத்து வைத்து அறுவை சிகிச்சை செய்து சரி செய்யப்பட்டது என்றார்.  

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த ஆசிட் வீச்சின் பாதிப்பால், மார்பகம் பாதிக்கப்பட்டதால் தனது சொந்த குழந்தைக்கு பாலூட்ட முடியாத சூழல் ஏற்பட்டு இருப்பது மிகவும் வேதனைக்குரியது என கண்ணீருடன் குறிப்பிட்டிருந்தார்.  

இந்த சம்பவத்தை செய்த அந்த கொடூரன் ஒரே மாதத்தில் சிறை தண்டனையில் இருந்து வெளிவந்து விட்டதாகவும் தெரிவித்த அவர், பெண்களுக்கு இப்போது மட்டுமல்ல எப்போதும் அரசு உரிய பாதுகாப்பை அளிப்பது இல்லை எனவும் ஆக்ரோஷத்துடன் பதிவிட்டிருந்தார்.