கோடி கோடியாக கொட்டிய பணம்! எட்டுத் திக்கும் புகழ்! ஆனால் ஹாஸ்பிடலில் அநாதை பிணமாக கிடந்த சில்க்! அதிர்ச்சி காரணம்!

முன்னாள் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவை அவ்வளவு எளிதாக யாரும் மறந்து விட முடியாது.


ஒரு காலத்தில் உப்புச் சப்பு இல்லாத படங்களை எப்படியாவது ஓட்டியாக வேண்டும் என்பதற்காக நகைச்சுவை காட்சிகள் போல கவர்ச்சி காட்சிகளும் பிட்டு பிட்டாக இணைத்திருப்பார்கள். அந்த காட்சிகளில் நடிகைகள் கவர்ச்சி உடை அணிந்தபடி ஒரு பாடலிலோ, நடனத்திலோ அல்லது பாலியல் ரீதியான காட்சிகளிலோ இடம் பெற்றிருப்பார்கள்.

நாளடைவில் அதுபோன்ற காட்சிகளை மையமாக வைத்தே பல மலையாள திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வசூல் கொட்டோ கொட்டென்று கொட்டியது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள திரையிலகில் 450 படங்களில் கவர்ச்சியாக நடித்து ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார் ஆந்திராவை சேர்ந்த சில்க் ஸ்மிதா என பெயரிடப்பட்ட விஜயலட்சுமி.

1960ம் ஆண்டு ஆந்திர மாநிலம் எலூரு கிராமத்தில் பிறந்த சில்க் ஸ்மிதா இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். பின்னர் கணவர் பிரிந்து சென்றுவிட சென்னைக்கு வந்து வீட்டு வேலை பார்த்து வந்தார். அதன் பின்னர் விணுசக்கரவர்த்தி மூலம் வண்டிச்சக்கரம் என்ற படத்தில் அறிமுகம் ஆன சில்க் ஸ்மிதா திரைப்படங்களில் கோடி கோடியாக சம்பாதித்தார்.

ஆனால் குடும்ப வாழ்க்கையை தொலைத்து விட்டார். எவ்வளவு ஆண்கள் அவருடன் பழகினாலும் கடைசி வரை யாரும் உண்மையான அன்போடு பழகவில்லை. அந்த கோவத்தில் ஒருமுறை தான் நக்சலைட் ஆக வேண்டும் என ஆசைப்பட்டதாகவும் ஏன் என்றால் அவ்வளவு இன்னல்கள் இந்த சமூகம் தனக்கு கொடுத்ததாகவும் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.

சம்பாதித்த பணத்தை சொந்த படங்கள் எடுத்த தோற்று கடன் சுமைக்கு ஆளான சில்க் ஸ்மிதாவை காதலனும் கைவிட்டார். அந்த விரக்தியில் 1996ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி தற்கொலை செய்து கொண்டார் சில்க் ஸ்மிதா. ஆனால் இதில் கொடுமை என்ன என்றால் சில்க் ஸ்மிதா உடலை பெற்று தகனம் செய்ய கூட யாரும் முன்வரவில்லை. இதனால் அவரது உடல் அநாதையாக மருத்துவமனையில் கிடத்திவைக்கப்பட்டிருந்து-

இன்று வரை அவரது மரணத்திற்கு உண்மையான காரணம் தெரியவில்லை. முதலமைச்சரின் மரணத்திற்கே விடை கிடைக்காதபோது நடிகையின் மரணத்திற்கு கிடைக்குமா என்ன?