என் உடல்..என் உரிமை..! நடிகை ஸ்ருதி ஹாசன் கூறிய பகீர் உண்மை!

நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தனது சமூக வலை தளத்தில் வெளியிட்ட புகைப்படம் நெட்டிசன்கள் மூலமாக பெரும் வைரலாகி உள்ளது.


ஸ்ருதி தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் இணைந்துள்ளதை அடுத்து பாலிவுடிலும் சில குறும்படங்களில் செய்ய உள்ளார். இதற்கிடையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட புகைபடத்தில் நெட்டிசன்கள் ஒல்லியாகிட்டீங்களா ? எடை கூடிட்டீங்களா ? என தொடர்ந்து கருத்து பதிவு செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், நெடிசன்களுக்கு பதில் கொடுத்த ஸ்ருதி நான் ஒல்லியாக இருந்தாலும் இது நானாக தேர்ந்தெடுத்த வாழ்க்கை, எனது மன நிலை மற்றும் எனது ஹார்மோன்களுடன் புரிந்துக்கொண்டு இணையும் முயற்சி எடுத்து வருகிறேன்.

ஆமாம், நான் பிளாச்டிக் சர்ஜரி செய்து கொண்டேன் , இது தான் என் முகம் ,எனது உடல் அதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டேன் இதன் மூலமாக நான் விளம்பரம்.தேடவில்லை என வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

மேலும் எனக்கான ஒரு நீண்ட காதல் கதையும் உள்ளது அது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் எனவும் ஒரு டிவிஸ்ட் வைத்து அவர் இன்ஸாகிராமில் பதிவிட்டுள்ளது தற்போது வைரல் ஆகி வருகிறது.

இதன் மூலம் அவரது முதிர்ச்சி ஆன இந்த பதில் பதிவுக்கு பலரும் தங்களது ஆதரவை கொடுக்கும் நிலையில் வழக்கம் போல நெட்டிசன்களுக்கும் செம்ம கண்டெண்ட் கொடுத்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.