என் ஆண் நண்பனே எனக்கு ஆள் செட்டப் செய்தான்! பிரபல நடிகையின் தங்கை வெளியிட்ட ஷாக் தகவல்!

மும்பை: என் நண்பரே என்னை பலாத்காரம் செய்ய ஆள் ஏற்பாடு செய்தார் என்று, நடிகை சாக்‌ஷியின் தங்கை ஷில்பா தெரிவித்துள்ளார்.


தமிழ் உள்பட பல மொழிகளில் நடித்தவர் சாக்‌ஷி. இவருக்கு திருமணமாகிவிட்டதால், சினிமா படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இவரது தங்கை ஷில்பா ஷிவானந்த், டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் ஷில்பா பரபரப்பு தகவல் ஒன்றை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். கடந்த ஜூலை 18ம் தேதியன்று ஒரு மணி நேர இடைவெளியில் இரண்டு பதிவுகளை அவர் பதிவிட்டுள்ளார்.

முதலாவது பதிவில், ''உங்களது சொந்த நண்பரே ஆள் ஏற்பாடு செய்து, உங்களை பலாத்காரம் செய்ய முயன்றால் எப்படி இருக்கும், உங்களது சகோதரியே சொத்திற்காக உங்களை வீட்டை விட்டு துரத்த முயன்றால் எப்படி இருக்கும், உங்களது சகோதரியின் மாமியாரே  சொத்திற்காக உங்களையும், உங்கள் அம்மாவையும் கொல்ல முயன்றால் எப்படி இருக்கும், இதையெல்லாம் உங்களின் 3வது கண்ணை திறந்தால் மட்டுமே சமாளிக்க முடியும்,'' என்று கூறியுள்ளார்.

2வது பதிவில், ''சில மாதங்களுக்கு முன்பாக என் அக்கா சாக்‌ஷியின் மாமியார் மீது எனது அம்மா கொலை முயற்சி புகார் ஒன்றை போலீசில் தெரிவித்திருந்தார். அவர் இன்சூரன்ஸ் பணத்திற்காக தனது சொந்த கணவரை கொன்றுவிட்டார். இதுபற்றி எனது அம்மா போலீசில் புகார் அளிக்க, உடனே அந்த பெண்மணி அமெரிக்காவிற்கு தப்பியோடிவிட்டார்,'' என்றும் தெரிவித்துள்ளார். 

அவரது பதிவால், அவரது சகோதரி சாக்‌ஷி மீதும், அவரது மாமியார் மீதும் சந்தேகம் எழுந்துள்ளது.