ஒரே ஒரு நாள் கால்ஷுட்! ரூ.10 கோடி! விலை பேசிய நிறுவனம்! நடிகை எடுத்த அதிர்ச்சி முடிவு!

ஆயுர்வேத மருந்து நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிக்க பிரபல இந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி மறுத்துவிட்டார்.


ஹிந்தி, கன்னடம் , தெலுங்கு, ஒரு ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷில்பா ஷெட்டி. தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் அவர் நடித்திருந்தார்.

2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த சில்பா செட்டி தற்போது நிக்காம என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்த ஆண்டில் இந்தப் படம் வெளியாக உள்ளது.

இவர் படத்தில் நடிக்காமல் இருந்த போதிலும் யோகா ஆயுர்வேதம் போன்றவற்றில் சிறந்து விளங்கி வந்தார். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது எப்படி என்பது தொடர்பான வீடியோக்களையும் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு வந்தார்.

இந்த நிலையில் ஆயுர்வேத மருந்து நிறுவனம் ஒன்று உடலை உடனடியாக இளைக்க வைக்கும் மாத்திரை விளம்பரத்தில் நடிக்குமாறு ஷில்பா ஷெட்டியை அணுகியது. மாத்திரை விளம்பரத்திற்காக ஒருநாள் கால்ஷூட்டுக்கு 10 கோடி ரூபாய் தரவும் அந்த நிறுவனம் ஒப்புக் கொண்டது.

ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்க முடியாது என்று சில்பா செட்டி கூறிவிட்டார். இதுதொடர்பாக பேட்டி அளித்த அவர் தனக்கு நம்பிக்கை இல்லாத ஒரு விஷயத்தை எப்படி விற்பனை செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.

இயற்கையாகவே உணவு பழக்கவழக்கங்களை கையாண்டு அதன் மூலமாக உடலை கட்டுக்கோப்பாக வைப்பதுதான் சிறந்த தீர்வாக இருக்கும் என்று தெரிவித்துள்ள ஷில்பா ஷெட்டி, இன்ஸ்டன்ட் எனப்படும் இடைப்பட்ட தீர்வு எதற்கு என்று கேள்வி எழுப்பியுள்ளார்.