ஆர்யாவுக்கு ஆசைப்பட்ட நடிகை சீதாலட்சுமியின் புதிய பாதை..! ஜொள்ளுவிட நீங்க ரெடியா?

ஒரு தனியார் நிகழ்ச்சியில் ஆர்யா நடித்த பெண் பார்க்கும் படலம் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை சீதாலட்சுமி ஆர்யா திருமணம் செய்து கொள்ளாத விரக்தியில் சினிமாவிலாவது ஜொலிக்கலாம் என நடிகை ரம்யா பாண்டியனுக்கு அடுத்ததாக தனது கவர்ச்சி படங்களை வெளியிட தொடங்கி உள்ளார்.


ஆர்யா தான் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்து அவர் பெண் பார்க்கும் படலத்தை ஒரு நிகழ்ச்சியாகவே கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடத்தியிருந்தார். இந்நிகழ்ச்சியை நடிகை சங்கீதா கிரிஷ் தொகுத்து வழங்கினார். 

எங்க வீட்டு மாப்பிள்ளை என பெயரிடப்பட்ட அந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதாவது அகதா, அபர்னதி, அனு, அன்சி, ஆயிசா, குகாசினி, கோமதி, ஜனனி, சாத்விகா, சிரேயா, சீதாலட்சுமி, சுசானா, சுவேதா, தேவசூர்யா, நவீனா, மல்வினா மசுகா சுவாதி ஆகியோர் ஆர்யாவை திருமணம் செய்து கொள்ளும் கனவுகளுடன் பங்கேற்றனர்.

16 பேரில் ஆர்யா மனதிலும் ரசிகர்களின் மனதிலும் அதிகம் இடம் பிடித்தவர்கள் சீதாலட்சுமி மற்றும் அபர்ணதி.

ஆனால் அனைவரையும் பெண் பார்த்து நேர்முகத் தேர்வு நடத்திவிட்டு ஆயிஷாவை திருமணம் செய்து கொண்டார் ஆர்யா. இதனால் 16 பெண்களும் ஆர்யாதான் கணவன் என கனவுகளுடன் வந்தவர்கள் ஏமாந்து தற்போது வேறு ஒரு மாப்பிள்ளையை தேடிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த நிகழ்ச்சியில் குடும்ப குத்து விளக்காகவே காட்சியளித்த சீதாலட்சுமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு மற்ற நடிகைகளின் ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார். அவர் வெளியிடும் ஒவ்வொரு படத்தையும் பார்த்து சிறுசுகளும் பெருசுகளும் கொஞ்ச நேரம் பார்த்து ஜொல்லு விட்ட பிறகே மற்றவர்களுக்கு பார்வேர்டு செய்கின்றனர் என்றால் பாருங்களேன். சீதாலட்சுமியின் படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி என்பது அந்த தொலைக்காட்சியின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை ஏத்துவதற்காக உண்மை நிகழ்ச்சி போல் தயாரிக்கப்பட்ட மாயை நிகழ்ச்சி என்பது யாருக்கும் தெரியாதா என்ன?

தற்போதைய காலங்கட்டங்களில் தமிழை பொறுத்தவரை உள்ளூர் சேனல்களையும் சேர்த்து 300ஐ தாண்டிவிட்டது. உள்ளூர் தொலைக்காட்சிகள், யூடியுப் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டுள்ள சேட்டிலைட் தொலைக்காட்சிகள் மக்களை தங்கள் சேனலை பார்க்க வைக்க போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தப் போராட்டத்தை சமாளிக்க முடியாமல் சில சேனல்கள் மூடப்பட்டன. அந்த வரிசையில் சமீபத்தில் காவேரி தொலைக்காட்சியும் மூட முடிவு எடுத்து ஊழியர்கள் நடுத் தெருவுக்கு அனுப்பப்பட்டனர். எனவே ரசிகர்களை கவர இதுபோல் ஏதாவது உண்மை நிகழ்ச்சி என்று சொல்வார்கள். அதை நாமும் நம்பித்தானே ஆகவேண்டும்.