கவர்ச்சி உடையில் ஆட்டோ சவாரி! வைரலாகும் பிரபல நடிகரின் மகள் புகைப்படம்!

2018 ஆம் ஆண்டு இரண்டு ஹிட் படங்களுடன் பாலிவுட் திரையுலகில் என்ட்ரி கொடுத்தவர் நடிகை சாரா அலி கான்.


23 வயது மட்டுமே ஆன இவர் தற்போது மற்ற நடிகைகளின் கவர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு தன்னை தன் அழகையும் உடம்பையும் மெருகேற்றி வருகிறார் .இந்த சாரா அலி கான் வேறு யாருமில்லை நடிகர் சைப் அலி கானின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைதான் இந்த சாரா அலி கான்.

 தனது அப்பாவை நம்பி இல்லாமல் தற்போது இவரும் படங்களில் நடிக்கத் தொடங்கி பல கோடிகளை சம்பாதித்து வருகிறார். இப்படி சம்பாதித்த பணத்தில் 50 லட்சம் ரூபாய் அளவில் ஒரு சொகுசு கார் ஒன்றை வைத்துள்ளார் .

இந்நிலையில் மும்பையில் உள்ள ஒரு ஜிம்மிற்கு தனது சொகுசு காரில் செல்வதை தவிர்த்துவிட்டு தனது தோழியுடன் அங்கு ரோட்டில் இருந்த ஒரு ஆட்டோவை அழைத்து சென்றுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவர் ஆட்டோவில் இருந்து இறங்கும் போது சில கவர்ச்சி புகைப்படங்களை கிளிக் செய்து சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி உள்ளனர். 50 லட்சம் ரூபாய் கார் இருந்தும் ஆட்டோவில் பயணம் செய்து ஜிம்மிற்கு சென்ற சாரா அலி கானுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.