வீட்டில் இருந்து தன்னை விரட்டி விட்டதாக நடிகை சங்கீதா மீது அவரது தாயார் கொடுத்த புகாருக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது.
மகன்களை மகிழ்ச்சிப்படுத்த 13 வயதில் என்னை தொழிலுக்கு அனுப்பினார் என் தாய்! சங்கீதா வெளியிட்ட பகீர் தகவல்!

உயிர் பிதாமகன் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை சங்கீதா. இவர் பிரபல பாடகர் கிரிஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இந்த நிலையில் தன்னை வீட்டில் இருந்து தனது மகள் விரட்டி அடித்து விட்டதாக மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார் சங்கீதாவின் தாயார்.
ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் சங்கீதாவா இப்படி என்று கேள்விகள் எழுந்தது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள சங்கீதா கூறியிருப்பதாவது: என்னுடைய தாய் என்னை 13 வயதில் தொழிலுக்கு அனுப்பிவிட்டார். இதனால் என்னை எனது தாயார் படிக்க வைக்கவில்லை. அங்கு ஒப்பந்தமாகும் படத்தின் அனைத்து ஊதியத்தையும் எனது தாயாரை பெற்றுக்கொண்டார். என்னிடமிருந்து நிரப்பப்படாத காசோலைகளில் எனது தாயார் கையெழுத்து வாங்கி வைத்துக் கொண்டார். எனது தாயார் அவரது மகன்கள் அதாவது குடிகார மகன்களுக்காக என்னை வேலை செய்ய வைத்து தகாத வேலைகளில் ஈடுபட வைத்து பணம் சம்பாதித்தார்.
தற்போது நான் வீட்டை அபகரித்து விட்டதாக கூறி என்னுடைய நிம்மதியை கெடுக்கிறார். அவ்வப்போது எனது கணவரின் நிம்மதியையும் எனது தாயார் கெடுப்பது வாடிக்கை. அவர்களுடைய நோக்கம் எல்லாம் பணம் மட்டும்தான். இருந்தாலும் இப்போது நான் சுயமாக சிந்தித்து முன்னேறி வாழ்க்கையில் செட்டில் ஆகி இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் எனது துணிச்சல் தான். அந்த துணிச்சல் உங்களிடமிருந்து தான் எனக்கு கிடைத்தது.
எனவே எனது அம்மாவான உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எனக்கு கொடுமைகள் செய்து இருந்தாலும் நான் உங்களை எப்போதும் அன்பு செய்வேன். இவ்வாறு சங்கீதா தனது விளக்கத்தில் கூறியுள்ளார்.