ஒரு காலத்தில் அஜித்துக்கு முன்னாடி விஜய்க்கு பின்னாடி! அந்த நடிகை இப்போ எப்டி தெரியுமா?

1990களில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வளம் வந்தவர் நடிகை சங்கவி. இவர் இளைய தளபதி விஜயுடன் ரசிகன் மற்றும் கோயம்புத்துர் மாப்பிளை ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.


அஜித்துடன் அமராவதி படத்தில் நாயகியாகவும், லக்கி மேன் , விஷ்ணு ஆகிய படங்களிலும் நாயகியாக நடித்தவர். ஒரு காலத்தில் விஜய்க்கு காலையிலும், அஜித்துக்கு மாலையிலும் கால்ஷீட் கொடுத்து பிசியாக இருந்தவர். இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தில் நடிகை மீனா மற்றும் மீனாவின் மகள் நைனிகா உடன் நடிகை சங்கவி சேர்ந்து நிற்பது போல ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 

நடிகை சங்கவி திருமணமான பிறகு சினிமாவில் முழு நேரம் நடிப்பதை தவிர்த்து ஒரு சில படங்களில் மட்டுமே எப்போதாவது நடிப்பார். பல  வருடமாக எந்த படங்களிலும் நடிக்காத அவர் இப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரி என்ட்ரி கொடுக்க வாய்ப்புள்ளது போல தெரிகிறது.

அவர் வெளியிட்டுள்ள அந்த  புகைப்படத்தில் முகம் கொஞ்சம் உப்பி வேறு யார் போலவோ தெரிகிறார். இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலை தளங்களில் வைரலாக ஷேர் செய்து வருகிறார்கள்.