ஆசிரியரை கரெக்ட் செய்த பிரபல கவர்ச்சி நடிகை!

நடிகை சனாகான் மும்பையைச் சேர்ந்தவர் இவருக்கு தற்போது 30 வயதாகிறது. கடந்த 2005 முதல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ,மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்


 மேலும் சேர்ந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு bigg boss hindi தொடரில் கலந்து கொண்டு மிகவும் புகழ் பெற்றார். கடந்த 2008ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளிவந்த சிலம்பாட்டம் படத்தில் நடித்து அசத்தியிருப்பார் நடிகை சனாகான்.

 இந்நிலையில் பிக்பாஸ் தொடரின் போது தனக்கு டான்ஸ் கோரியோகிராபர் ஆக இருந்த மெல்வின் என்பவரை காதலிப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களாக வெளியிட்டுள்ளார் அவர்.

 மேலும்…

 எனது வாழ்வில் நான் சரியாக ஒரு விஷயத்தை செய்தேன் என்றால் அது எனது இதயத்தை உனக்கு கொடுத்தது தான் எனவும், உன்னை சந்திக்கும் வரை இப்படி நான் உணர்ந்ததில்லை எனவும் காதல் ததும்ப ததும்ப பல நீள வரிகளை எழுதி, கவிதைகளாக, காதலாக கொட்டி தீர்த்துள்ளார் சனாகான். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.