ஆண் நண்பருக்கு அந்த இடத்தை கொடுத்த கோமாளி பட நடிகை..! பிறகு கைகளை வைத்து அவர் செய்த செயல்..! வைரல் வீடியோ உள்ளே!

பிரபல நடிகை சம்யுக்தா தனது ஆண் நண்பர் ஒருவருடன் யோகாசனம் செய்யும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. கோமாளி திரைப்படத்தில் இவர் ஜெயம் ரவியின் பள்ளிப்பருவ காதலியாக நடித்து இருப்பார். இவரது நடிப்பில் சமீபத்தில் பப்பி என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இவர் தற்போது தமிழ் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

நடிகை சம்யுக்தா ஹெக்டே எப்பொழுதுமே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆவார். புதிய வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களை எப்போதும் பிஸியாக வைத்துக் கொள்வதில் வல்லவர். தற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால் திரைப்பட படப்பிடிப்புகள் முடங்கியுள்ள நிலையில் நடிகைகளும் தங்களது வீடுகளிலேயே அடைபட்டு உள்ளனர்.

இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார் நடிகை சம்யுக்தா. அனுதினமும் புதிய வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் நடிகை சம்யுக்தா ஹெக்டே தற்போது தனது ஆண் நண்பருடன் யோகாசனம் செய்வது போல ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் சம்யுக்தா ஹெக்டேவின் ஆண் நண்பர் கீழே படுத்துக்கொண்டு தனது இரு கைகளால் சம்யுக்தா ஹெக்டேவின் இடுப்பு பகுதியை பிடித்துக்கொண்டு அவரை தூக்கி நிறுத்தி யோகாசனம் செய்கிறார்.

இந்த வீடியோ லாக்டவுன் நடப்பதற்கு சில வாரங்களுக்கு முன்னால் மங்களூருக்கு அருகே எடுக்கப்பட்ட வீடியோ என்றும் அவர் அந்த பதிவில் கூறியுள்ளார். நடிகை சம்யுக்தா ஹெக்டேவின் இந்த விடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.