கர்ப்பமாக இருந்த போதும் படுக்கைக்கு அழைத்தனர்! நடிகை வெளியிட்ட ஷாக் தகவல்!

கர்ப்பமாக இருந்த போதும் தவறான முறையில் தன்னை அணுகியதாக நடிகை சமீரா ரெட்டி கூறியுள்ளார்.


வாரணம் ஆயிரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த அவர் பின்னர் அசல், வெடி, வேட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். ஹிந்தி மற்றும் தெலுங்கிலும் சில படங்களில் சமீரா ரெட்டி நடித்துள்ளார். பின்னர் தொழிலதிபர் அக்சய் வர்தேவை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார்.

இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு குழந்தை உள்ள நிலையில் தற்போது சமீரா ரெட்டி மீண்டும் கர்ப்பமாக உள்ளார் . அண்மையில் பேட்டியளித்த அவர் திரையுலகில் ஒழிக்கப்பட வேண்டியது எது என்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார். இந்த கேள்விக்கு பதிலளித்த சமீரா ரெட்டி பெண்களிடம் இருந்து சிலவற்றை எதிர்பார்க்கும் மனப்பாங்கு மாற வேண்டும் என்று கூறினார்.

கவர்ச்சிப் பொருளாக அல்லாமல் பெண்களிடம் நிறைய அம்சங்கள் இருப்பதாகவும் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சமீரா ரெட்டி கூறியுள்ளார். பல தருணங்களில் தம்மை சிலர் தவறாக அணுகியதாகவும் கர்ப்பமாக இருப்பது தெரிந்தும் கூட சிலர் அணுகியதாகவும் அவர் போட்டு உடைத்துள்ளார். இது மாறுவதற்கு சில காலம் ஆகும் என்றாலும் மாறும்போது சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்த சமீரா ரெட்டி திரையுலகில் ஆண்கள் பெண்கள் என்ற பாகுபாடு அதிக அளவில் இருப்பதாக கூறினார்.