சென்னை: ''உடல் தோற்றத்தை விட மனத்தோற்றமே முக்கியம்,'' என்று நடிகை சமந்தா கூறியுள்ளார்.
உடல் அமைப்பை விட அது தான் முக்கியம்..! சமந்தா உடைத்த ரகசியம்!

முன்னணி நடிகை சமந்தா, 2019ம் ஆண்டிற்கான மிகவும் விரும்பத்தக்க பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இதில், சமந்தா முதல் இடத்திலும், 2வது இடத்தில் சஞ்சனா விஜ் மற்றும் 3வது இடத்தில் பி.வி.சிந்துவும் உள்ளனர். அதிதிராவ் ஹைதரி 4வது இடத்திலும், பூஜா ஹெக்டே 5வது இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில் முதலிடம் பிடித்தது பற்றி நடிகை சமந்தா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ''எனது கணவருடன் சேர்ந்து வெளியிடங்களுக்குச் செல்லும்போது கவர்ச்சியாகவும், அனைவருக்கும் பிடித்தமானவளாகவும் இருக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொருவருக்குமே அவரது நம்பிக்கைதான் வாழ்க்கையை மாற்றக்கூடிய விசயமாகும்.
நாம் எந்தளவுக்கு ஒரு விசயத்தை நம்புகிறோமோ, அந்தளவுக்கு நமது வாழ்க்கை மாறும். உடல் தோற்றத்தை விட மனத்தோற்றமே ஒருவரை விரும்பத்தக்க நபராக மாற்றுகிறது. அந்த வகையில், உடல் தோற்றத்தை விட மனதின் தோற்றமே எனக்கு முக்கியம். அதனை அழகுபடுத்தவே விரும்புகிறேன். மனம் அழகாக இருந்தால், உடல் அழகாக மாறிவிடும்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.