திருமணம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் நடிகை சமந்தா கர்ப்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல நடிகை சமந்தா கர்ப்பம்?
கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் சமந்தா தனது காதலர் நாக
சைத்தன்யாவை கரம் பிடித்தார். திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ந்து திரைப்படங்களில்
கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்போது படங்களில் நடிப்பதை ஒத்திவைத்துவிட்டு புத்தாண்டை
கொண்டாட தனது கணவருடன் சமந்தா நெதர்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார்.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம்
நகரில் தற்போது தனது பொழுதை கணவருடன் இனிமையாக கழித்து வரும் சமந்தா அங்கு எடுக்கப்பட்ட
சில புகைப்படங்களை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.
ஒன்று இரண்டு படங்களை பார்க்கையில் சமந்தா கர்ப்பமாக உள்ளது போல் தெரிவதாக சில ரசிகர்கள்
கூறி வருகின்றனர்.
ட்விட்டர் பக்கத்திலேயே
சமந்தா நீங்கள் கர்ப்பமாக இருக்கிறிர்களா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால்
அந்த கேள்விக்கு எதற்கும் சமந்தா நேரடியாக பதில் அளிக்கவில்லை. இதனால் அவர் கர்ப்பமாக
இருப்பது உறுதி என்று சில ரசிகர்கள் அடித்துக்கூறுகின்றனர். மேலும் சமந்தா புகைப்படத்திற்கு
போஸ் கொடுக்கும் விதத்திலேயே அவர் கர்ப்பமாக இருப்பது தெரிவதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தனது
ட்விட்டர் பக்கத்தில் சமந்த போட்டுள்ள ட்வீட் அவர் கர்ப்பமாக உள்ளதை உறுதிப்படுத்துவதாக
இருக்கிறது என்றும் சிலர் கூறுகின்றார்கள். அதாவது, 2019ம் ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்போடு
தனக்கு தொடங்கியுள்ளதாகவும், எனவே ஊறுகாய் போன்ற சின்ன சின்ன சந்தோசங்கள் தனக்கு தேவையில்லை
என்று அந்த ட்வீட்டில் சமந்தா கூறியுள்ளார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்பு
என்று சமந்தா கூறியிருப்பது 2019ல் அவருக்கு குழந்தை பிறக்க உள்ளதை தான் என்று ரசிகர்கள்
அடித்துக் கூறுகிறார்கள். ஆனால் சமந்தாவே இது குறித்து தெரிவிக்கும் வரை அவர் கர்ப்பமாக
இருக்கிறார் என்று நமக்கு எப்படி தெரியும்?