பிரேமம் என்ற ஒரு படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் மிகப்பெரும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி.
ரூ.2 கோடி சம்பளம்! அந்த மாதிரி விளம்பரம்! ரவுடி பேபி சாய் பல்லவியின் செம முடிவு

இவர் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். பிரேமம் படத்திற்கு பிறகு அப்படியே கோலிவுட்டிற்கு ஷிப்ட்டான அம்மணியை தற்போது வரை காணவில்லை.
அங்கு சில படங்களில் நடிக்க அவருக்கு ரசிகர்கள் ஏகோபித்த வரவேற்பு கொடுத்தனர். தமிழில் மாரி படத்தின் இரண்டாம் பாகத்திலும் சூர்யாவின் என் ஜி கே படத்திலும் நடித்துள்ளார் . இந்நிலையில் தெலுங்கு மொழியில் அவருக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து விட்டு ஒரு காஸ்மெட்டிக் நிறுவனம் அவரை அழைத்து சென்று, கவர்ச்சியாகவும் மேக்கப் பொருட்களை அணிந்து கொண்டும் நடிக்க இரண்டு கோடி ரூபாய் கொடுக்கிறோம் என அவரை அணுகி உள்ளது .
ஆனால் அந்த மாதிரி விளம்பரங்களில் நடிப்பதில்லை என உடனடியாக மறுத்துள்ளார் சாய் பல்லவி. மேலும் படங்களில் நடிக்கும்போது நானே மேக்கப் போட்டுக்கொண்டு நடிப்பதில்லை, மேலும் கவர்ச்சியாகவும் நான் நடிக்கும் பழக்கம் கொண்டவர் கிடையாது. இதன் காரணமாக அந்த விளம்பரத்தில் நடிக்க முடியாது என்று கூறி இரண்டு கோடி ரூபாயை உதறி தள்ளியுள்ளார் சாய் பல்லவி.