மாசம் ரூ.3 லட்சம்! வீட்டு வாடகை! ரோஜாவுக்கு ஜெகன் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

நடிகை ரோஜாவுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் கட்சி சார்ப்பில் மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு கழக தலைவர் பதவி


ஆந்திராவின் நகரி தொகுதியில் 2வது முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரோஜாவுக்கு, அம்மாநிலத்தின் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள், கட்சி சார்ப்பில் ஆந்திட மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு கழக தலைவர் பதவி வழங்கியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலக பிரபல நடிகையுமான, ரோஜா அவர்கள் ஆந்திர மாநிலத்தில் நாரா சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசக் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையினை தொடங்கியவர். அங்கு உட்கட்சி விவகாரத்தில் அவருக்கு சரியான அங்கிகாரம் கிடைக்காத காரணத்தால், ஒய்எஸ்ஆர் காங்கிரஸியில் இணைந்தார்.

பின்னர், ஆந்திராவின் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சிகாக அதிகமாக தனது கட்சிக்காக உழைத்தவர். அந்த உழைப்பின் பலனாக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அதிக பலத்துடன் ஆட்சியை பிடித்தது. மேலும், நடிகை ரோஜா, நகரி தொகுதியில் 2வது முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், பொது மக்கள் மற்றும் ரோஜா ஆதார்வாளர்கள் அனைவரும் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையில் ஆனா ஆட்சியில் ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர் பாக்கப்பட்டது. ஆனால் கட்சியில் மூத்த தலைவர்கள் உள்ள நிலையில் ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்க முடியவில்லை.

இந்நிலையில் தான், நகரி தொகுதியில் 2வது முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரோஜா அவர்களுக்கு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்ப்பில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ரோஜாவுக்கு ஆந்திர மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு கழக தலைவர் பதவியை வழங்கியுள்ளார்.

மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு கழக தலைவர் பதவி என்பது, அமைச்சருக்கு நிகரானது. அதுமட்டுமின்றி, அமைச்சர் பதவிக்கு வழங்கப்படும் ஒரு மாத ஊதியமாக, ரூ. 2 லட்சம், வாகன படி ரூ 60,000, தங்குமிடத்திற்கு ரூ 50000 தனிப்பட்ட சலுகையாக ரூ. 70000, மொபைல் கட்டணங்களுக்கு ரூ.2000 அமைச்சர் பதிவிக்கு நிகரான அனைத்து சலுகைகளும் ரோஜாவுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த செய்தியை அறிந்த ரோஜாவின் ஆதரவாளர்கள் மற்றும் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகுரி தொகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.