பட வாய்ப்பு இல்லை! பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை!

பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


  1. சென்னை வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ரியாமிக்கா. பெங்களூரை சேர்ந்த மாடலான இவர் குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்கிற படத்தில் நடித்துள்ளார். சின்னத்திரை நடிகர் பிரஜின் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் ரியாமிக்கா கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படம் வெளியாகி ஓடாத நிலையில் ரியாமிக்கா தொடர்ந்து வாய்ப்பு தேடி வந்தார்.   இந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பில் ரியாமிக்கா தங்கியிருந்த வீட்டின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த காவலாளி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த போலீசார் கதவை உடைத்து பார்த்த போது உள்ளே ரியாமிக்கா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். உடனடியாக உடலை மீட்ட போலீசார் பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  விசாரணையில் பெங்களூரைச் சேர்ந்த ரியாமிக்கா பொறியியல் படித்துவிட்டு மாடலிங் செய்து வந்துள்ளார். பின்னர் பெங்களூரில் சில ஊடகங்களிலும் அவர் பணியாற்றியுள்ளார். நடிகையாக வேண்டும் என்கிற  தீராத ஆசையில் இருந்த ரியாமிக்காவிற்கு குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்கிற படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சென்னை வந்த அவர் அந்த படத்தில் நடித்து முடித்தார்.   குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் படம் வெற்றி பெறாத நிலையில் ரியாமிக்காவுக்கு வேறு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. கடந்த ஓராண்டாகவே வாய்ப்புகளுக்காக அலைந்து திரிந்த அவர வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் தற்கொலை முடிவை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

   வாய்ப்பு கிடைக்கவில்லை என்று நடிகை ரியாமிக்கா தற்கொலை செய்து கொண்டது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.