தற்கொலைக்கு முதல் நாள் இரவு ரியாமிகாவுடன் தங்கியிருந்த பிரபல நடிகர்! விசாரணை தீவிரம்!

நடிகை ரியாமிகா தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள் இரவு பிரபல நடிகர் ஒருவருடன் தங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


   குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், எக்ஸ் வீடியோஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளவர் ரியாமிகா. இரண்டு படங்களும் பெரிய அளவில் ஓடாத நிலையில் தொடர்ந்து வாய்ப்புகள் தேடி ரியாமிகா ஒவ்வொரு படக்கம்பெனியாகவும், இயக்குனர் அலுவலகமாகவும் ஏறி இறங்கி வந்தார். ஆனால் எங்கும் அவருக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை.   இந்த நிலையில் சென்னை வளசரவாக்கத்தில் அவர் தங்கியிருந்த அடுக்குமாடிகுடியிருப்பில் ரியாமிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ரியாமிகாவுக்கு தினேஷ் என்கிற காதலன் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து தினேசை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

  ஆனாலும் கூட ரியாமிகாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில் வளசரவாக்கத்தில் ரியாமிகாவின் காதலன் தினேஷ் திடீரென செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரியாமிகா தற்கொலை செய்து கொள்வதற்கு முதல் நாள் வீட்டிற்கு வரவில்லை என்று கூறினார். அவள் வீட்டில் இல்லாதது தெரிந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் கேட்டதாகவும் தினேஷ் தெரிவித்துள்ளார்.

  அதற்கு தான் எங்கு வேண்டுமானாலும் இருப்பேன், தனக்கு வீட்டிற்கு வரத் தெரியும் என்று மட்டும் ரியாமிகா பதில் அளித்ததாகவும் தினேஷ் தெரிவித்தார். இதன் மூலம் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் அவர் யாரோ ஒருவருடன் இருந்ததாகவும், அவரை பிடித்து விசாரித்தால் உண்மை தெரியவரும் என்றும் தினேஷ் கூறினார். இதனிடையே ரியாமிகா தற்கொலைக்கு முதல் நாள் இரவு ஒரு நடிகருடன் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.