அந்த இடத்தில் மிளகாயை சொருகிக் கொள்ளுங்கள்! முஸ்லீமை திருமணம் செய்த நடிகைக்கு ஏற்பட்ட பரிதாபம்!

ஹிந்தி சின்னத்திரை உலகில் மிகப் புகழ்பெற்ற நடிகையாக இருப்பவர் ரிச்சா சோனி. இவர் சமீபத்தில் தன்னுடன் நடித்து வந்த ஜிகர் அலி என்னும் இஸ்லாமியரை திருமணம் செய்து கொண்டார்.


இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி பெங்காலி முறைப்படியும் அதே மாதம் 18 ஆம் தேதி இஸ்லாமிய முறைப்படி வெகு விமர்சையாக நடந்து முடிந்தது

 முதலில் ரிச்சாவின் பெற்றோர் அலியை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை. பின்னர் அவரது குணம் மற்றும் அறிமுகம் தெரிந்த பின்னர் ஒப்புக்கொண்டனர் .ரிச்சாவின் பெற்றோர் சம்மதத்துடன் நடந்த இந்த திருமணத்தை சமூக வலைதளங்களில் பல அரைகுறை மனதுடன் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்து கொண்டது தவறு என்றும் கூறிவந்தனர்.

 இந்நிலையில் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் ரிச்சா. இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது….

 இந்த புகைப்படத்தை என்னை எதிர்ப்பவர்களுக்காக பதிவு செய்கிறேன். வெறுமனே ஒரு தெரியாத ஒரு முகவரியில் வந்து என்னை திட்டிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு முதுகெலும்பு இல்லை. உங்களது வார்த்தைகளால் நான் காயப்பட போவதில்லை. நீங்கள் எங்களை ஜாதி மதம் என பிரித்துக் கொண்டே இருங்கள். என்னை விபச்சாரி என்று அழைப்பது உங்களுக்கு மிக எளிதாக இருக்கலாம்.

 உங்களுக்கு மனிதம் இல்லை, நீங்கள் சரியாக வளர்க்கப்படவில்லை என்று நன்றாகத் தெரிகிறது. நான் இதனை கொண்டாடப் போகிறேன். என்னுடைய கணவரை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இனியும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்கள் பின்னால் மிளகாயை எடுது பின்னல் சொருகிக் கொள்ளுங்கள் என்று காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார் ரிச்சா.