என் துயரங்களுக்கு காரணம் நான் செய்த அந்த ஒரே ஒரு தவறு தான்! வேதனையில் உருகும் நடிகை ரேவதி!

வாழ்க்கையில் தான் செய்த தவறு திருமணம் செய்து கொண்டதுதான் என 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து தற்போது சீரியலில் என்ட்ரி ஆகி உள்ள நடிகை ரேவதி தெரிவித்துள்ளார்.


ரேவதி 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோதே அவரை சந்தித்த இயக்குநர் பாரதிராஜா மண்வாசனை படத்தில் கதாநாயகியாக நடிக்க வருமாறு கேட்டுள்ளார். ஆனால் அந்த சமயத்தில் 16 வயது என்பதால் நடிக்க விருப்பம் இல்லை என கூறிய ரேவதி, நடிக்கவும் தெரியாது என உண்மையை பாரதிராஜாவிடம் சொல்லி உள்ளார்.

ஆனால் நடிக்கத் தெரியாதவர்கள்தான் எனக்கு வேண்டும். சொல்லிக் கொடுப்பது எளிது வன வற்புறுத்தி தமிழ்த் திரையுலகில் ரேவதியை அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா. 

30 ஆண்டுகள் சினிமாவில் சாதித்த நடிகை ரேவதி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் அழகம்மை மெகா சீரியல் மூலம் அந்நாள், இந்நாள் ரசிகர், ரசிகைகளை தற்போதும் தன் பக்கம் தக்க வைத்துள்ளார் என்பதே உண்மை. இந்நிலையில் தற்போது மனம் திறந்து பேசியுள்ள ரேவதி வாழ்க்கையில் தான் செய்த மிகப் பெரிய தவறு திருமணம் செய்து கொண்டதுதான் எனவும் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் இன்னும் நிறைய படங்கள் நடித்திருப்பேன் என்றும் உண்மையை போட்டு உடைத்துள்ளார்.

தற்போது மீண்டும் நல்ல வாய்ப்புகள் வருவதாகவும் காலம் தன்னை நல்ல எதிர்காலத்திற்கு அழைத்து செல்லும் எனவும் நம்பிக்கையுடன் தெரிவித்தார் ரேவதி. காதலைப் பற்றியும், திருமண பந்தத்தின் புனிதம் பற்றியும் புதுமைப் பெண் திரைப்படத்தில் பேச ஆரம்பித்த நடிகை ரேவதி தற்போது நடிக்கும் அழகம்மை சீரியல் வரைக்கும் பேசிக் கொண்டிருக்கிறார்.

வசனங்கள் சினிமாவில் மட்டும்தானா? சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிக்கமாட்டார்களா நடிகர்கள் என கேட்கவேண்டாம். வசனங்களை உச்சரிப்பது உதடுகள் மட்டுமே. உதட்டை அசைக்க வைப்பது கதாசிரியர்கள்.