கடைசி வரை காத்திருந்தும் கை விரித்த பு.தளபதி நடிகர்! கண்ணீருடன் கழுத்தை நீட்ட தயாரான கிடா குட்டி நடிகை!

கடைசி வரை காத்திருந்தும் பு.தளபதி நடிகரிடம் இருந்து திருமணம் தொடர்பாக எந்த தகவலும் வராத காரணத்தினால் கிடா குட்டி நடிகை வேறு ஒருவருக்கு கழுத்தை நீட்ட தயாராகிவிட்டாராம்.


நயன்தாரா, அசின் வரிசையில் கேரளத்தில் இருந்து தமிழ் திரையுலகிற்கு வந்த நடிகை இவர். வயதிற்கு மீறிய வனப்பு இவருக்கு உண்டு. பார்க்க கிடாகுட்டி கணக்கா சும்மா கின்னுனு இருக்குறதால இவரை நடிகர்கள் கிடாகுட்டி என்று செல்லமாக அழைப்பதுண்டு. சினிமாவில் நடித்து பிரபலமான பிறகு தான் 10ம் வகுப்பு தேர்வையே எழுதி பாஸ் ஆனார் இவர். 

துவக்கத்தில் இவர் நடித்து வெளியான படங்கள் அனைத்துமே செம ஹிட். வழக்கம் போல் பட வாய்ப்புகள் குவிந்தன. துவக்கத்தில் மதுரையில் இருந்து தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வரும் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல அவதாரம் எடுத்த நபரின் கட்டுப்பாட்டில் இருந்ததாக இந்த நடிகையை பற்றி கிசுகிசுப்பார்கள்.

பிறகு அதே மதுரை கதை களத்துடன் வெளியான படத்தில் பு.தளபதியுடன் ஜோடி போட்ட பிறகு இவரது மார்கெட் உச்சத்திற்கு போனது. தொடர்ந்து பு.தளபதியுடன் பழைய ரஜினி படத்தின் டைட்டில் கொண்ட படத்தில் நடித்த போது தான் இருவருக்கும் இடையே பத்திகிட்டதாக கூறுவார்கள். அதன் பிறகு புதிய படத்தில் ஒப்பந்தம் ஆகாமல் பு.தளபதியுடன் ஜோடி போட்டு சுத்தி வந்தார் நம்ம கிடா குட்டி நடிகை.

ஒரு கட்டத்தில் படங்களுக்கு முழுக்கு போட்டு கல்யாணம் ஆகி செட்டில் ஆகிவிடலாம் என்று முடிவெடுத்து பு.தளபதியுடன் கோவாவில் சென்று கொட்டமடிக்க அந்த தகவல் கோலிவுட்டில் பட்தொட்டியெங்கும் பரவியது. இதனால் நடிகையை யாரும் சீண்டவில்லை. அதற்குள் பு.தளபதி தனது சினிமா வாழ்க்கையை வேறு பக்கம் திருப்பி தமிழக அளவில் பரபரப்பான அரசியல் நடிகராகிவிட்டார்.

இந்த களேபத்தில் நம்ம கிடாகுட்டி நடிகையை பு.தளபதி மறந்துவிட வாய்ப்புகள் இல்லாமல் முடங்கினார். இந்த நிலையில் பு.தளபதி கல்யாணம் செய்து கொள்ள முடிவெடுத்து நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் அதில் ஏதோ சிக்கல் என்று தற்போது தகவல் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கண்ணீருடன் கிடா குட்டி நடிகை விட்ட மெசேஜை பார்த்து மீண்டும் கோவாவுக்கு பறந்துள்ளனர் இருவரும்.

ஆனால் கல்யாணம் என்றதும் இரவோடு இரவாக பு.தளபதி அங்கிருந்து சென்னை திரும்பியுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரித்தில் தனது அப்பா – அம்மாவை தொடர்பு கொண்டு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்யுங்க,மாப்பிளை யாராக இருந்தாலும் ஓகே என்று கூறி அதிர வைத்துள்ளார். இது தான் அந்த நடிகைக்கு கல்யாணம் என்று தற்போது தகவல் வெளியாக காரணமாம்.