சென்னை: தனது பெயரில் பகிரப்படும் போலியான நிர்வாண புகைப்படங்களை நடிகை ரம்யா பாண்டியன் மறுத்துள்ளார்.
இணையதளங்களில் வெளியான அரை நிர்வாண போட்டோஸ்! அதிர்ச்சியில் இடுப்பு மடிப்பு புகழ் ரம்யா பாண்டியன் எடுத்த முடிவு!

ஜோக்கர் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான ரம்யா பாண்டியன், பட வாய்ப்புகள் குறைந்ததை தொடர்ந்து, சில மாதங்களுக்கு முன்பாக, கலக்கலான போட்டோஷூட் ஒன்றை நடத்தினார். இதன்படி, இடுப்பு மடிப்பை காட்டும் புகைப்படங்களை வெளியிடவே, அவருக்கு சமூக ஊடகங்களில் ரசிகர் பட்டாளம் குவிந்தது.
இந்நிலையில், ட்விட்டர், ஃபேஸ்புக்கில், ரம்யா பாண்டியனின் புதிய போட்டோஷூட் புகைப்படம் எனக் கூறி, நிர்வாண புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. இதனைப் பார்த்த பலரும் அதிர்ச்சியடைந்தனர். உண்மையிலேயே ரம்யா பாண்டியன் இப்படி போட்டோ வெளியிட்டாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டது.
இதையடுத்து, ரம்யா பாண்டியன் தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார். ''ட்விட்டரில் எனது பெயரிலேயே யாரோ சிலர்
போலியான ஐடி தொடங்கி, வேறொருவரின் நிர்வாண புகைப்படங்களை எனது பெயரில் பகிர்ந்து வருகின்றனர். அதில்
இருப்பது நான் இல்லை. இதுபற்றி விரைவில் போலீசில் புகார் கொடுக்க உள்ளேன்,'' என ஊடகங்களுக்கு
விளக்கம் அளித்திருக்கிறார்.