இடுப்பு மடிப்பை காட்டி போடோ சூட் நடத்தியது ஏன்? ரம்யா பாண்டியன் உடைக்கும் ரகசியம்!

தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு கவர்ச்சி வேண்டுமென்றால் அதை தாராளமாக காட்டுவேன் என்று ஜோக்கர் பட நாயகி ரம்யா பாண்டியன் ஓபனாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மற்ற நடிகைகளின் ரசிகர்களின் கவனமும் ரம்யா பாண்டியன் பேச்சில் கவனத்தை ஈர்த்துள்ளது.


சமூக வலைதளத்தில் கவர்ச்சி படத்தை வெளியிட்டதன் மூலம் கடந்த சில நாட்களாக சினிமா ரசிகர்களால் அதிகம் பேசப்படுபவர் ஜோக்கர் பட நாயகி ரம்யா பாண்டியன். அவர் வைரல் ஆனதற்கு மேக் அப் இல்லாமல் புடவையில் வெளியிட்ட கிளுகிளு கவர்ச்சி புகைப்படங்கள்தானாம்.

இது ஒரு புறம் இருக்க புகைப்படத்தில் ரம்யா பாண்டியனின் இடுப்பு மடிப்புகளுடன் அம்சமாக இருப்பதாகவும் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். மீண்டும் பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளதாக ரசிகர்களின் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ளார் ரம்யா பாண்டியன். 

ஃபோட்டோ ஷூட் எடுக்க பிரதான காரணம் என்னை சுய மதிப்பீடு செய்து கொள்வதற்காக மட்டுமே எனக் கூறும் ரம்யா பாண்டியன் உடல் எடை, தோற்றம் என எதில் மாறுதல் தேவைப்படும் என்பதை தெரிந்து கொள்ள எடுத்த புகைப்படங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். புடவை என்பது தினசரி நாள்தோறும் பெண்கள் பயன்படுத்தும் உடை. இதில் ஒரு விஷயமும் இல்லை.

ஆனால் எப்படி வைரல் ஆனது என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.  தான் அடிக்கடி சீரான இடைவெளி விட்டு ஃபோட்டோ ஷூட் எடுப்பதாகவும் அதை இணையத்தில் வெளியிடுவதாகவும் தெரிவிக்கும் ரம்யா பாண்டியன் சில போட்டோக்கள் வெஸ்டர்ன் உடையில் எடுக்கப்பட்டதால் மாறுதலுக்காக புடவையில் இந்த போட்டோ எடுத்ததாக கூறினார். 

ஃபோட்டோகிராபர் சுரேந்தர் ஐடியாவில் தான் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன எனக்கூறும் ரம்யா பாண்டியன் என்னுடைய தரப்பில் இருந்து நான் எடுக்கும் முயற்சியே தவிர இதில் திரைப்பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்று அர்த்தமில்லை. எனக்கு பட வாய்ப்பு வருகிறத என்பதற்காக அனைத்தையுமே ஏற்று கொள்ள இயலாது.

நல்ல ஒரு கதாபாத்திரத்தை எதிர்பார்க்கும் அதே சமயத்தில் கதாபாத்திரத்திற்கு கவர்ச்சி தேவை என்றால் அதில் தவறில்லை என கூறினார். ஜோக்கர் படத்தில் குடும்பப் பாங்கான பெண்ணுக்கு ஏற்றார் போல் நடித்தேன். அது போல நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் என்ன தேவையோ அதை நிச்சயம் நான் செய்வேன். வெகு விரைவில் எனது அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளிவரும் என்றார்.