அதிக சம்பளம்! செக்ஸ் பட நடிகையாக மாறிய ரம்யாகிருஷ்ணன்!

நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆபாச பட நட்சத்திரமாக நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது


2010ஆம் ஆண்டில் வெளிவந்த படம் ஆரண்ய காண்டம். மாறுபட்ட திரைக்கதைக்காக இந்த படம் அதிகமாக பேசப்பட்டது. இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் பல விருதுகளை குவித்தது. 

இவர் அடுத்ததாக இயக்கியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் இப்படத்தின் திரைக்கதையை அவர் செதுக்கியுள்ளார். இதில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் சூப்பர் டீலக்ஸ்-உம் ஒன்று. இதில் நடிகர் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருக்கிறார். சமந்தா கொலைகாரி வேடத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. ரம்யா கிருஷ்ணன் இப்படத்தில் ஆபாசப் பட நடிகையாக நடித்து இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றது.

 பாகுபலி இரண்டு பாகங்களிலும் ராஜமாதா சிவகாமி தேவியாக கம்பீரமாக நடித்து புகழ்பெற்ற ரம்யா கிருஷ்ணன் ஆபாசப்பட நடிகை வேடத்தை துணிந்து கையில் எடுத்து நடித்திருப்பதாக படத்தைப் பார்த்த குழு பாராட்டி இருக்கிறது. மேலும் கதாபாத்திரச் சித்தரிப்பு திரைக்கதையும் பிரமாதமாக உள்ளதாக அந்தக் குழு மிரண்டுபோய் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காரணமாக சூப்பர் டீலக்ஸ் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

அதே சமயம் ரம்யாகிருஷ்ணனுக்கு தமிழ் படங்களில் சில வருடங்களாக பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. இதனால் தான் நதியா வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு சென்ற செக்ஸ் பட நடிகை கேரக்டரில் நடிக்க ரம்யாகிருஷ்ணன் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது- இதற்காக ரம்யா கிருஷ்ணனுக்கு அதிக சம்பளம் பேசப்பட்டுள்ளது.